Karur

News September 6, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்ட கிராமங்கள், நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற, தங்களது விவரங்களை  இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் (https://tnsocialwelfare.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

கரூரில் திருட முயன்ற 3 பேர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நங்கவரம் சபரி மேடு பகுதியில் பார்த்திபன் என்பவர் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று திருச்சியை சேர்ந்த பிரவீன், குமார், சங்கப் பிள்ளை, ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து மீன்களை திருடியபோது, கையும் களவுமாக பிடித்து குளித்தலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 6, 2024

கரூர்: பீகாரில் தலைமறைவாக இருந்த கணவர் கைது

image

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் புக்கர்மாஜி – சன்மதிதேவி ஆகியோர் கரூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் புக்கர்மாஜிக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை கல்லால் தாக்கிக் கொன்று தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த புக்கர்மாஜி நேற்று கைது செய்யப்பட்டார்.

News September 6, 2024

கரூரில் பூக்களின் விலை உயர்வு

image

கரூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. (ஒரு கிலோ மதிப்பீட்டில்), குண்டுமல்லி ரூ.800, முல்லைப்பூ ரூ.600, ஜாதிப்பூ 500, செவ்வந்தி பூ 200, ரோஜா பூ 300, சம்பங்கி பூ 250க்கும், மருவி நாலு கட்டு ரூ.100க்கும், துளசி 4 கட்டு ரூ.50க்கும் விற்பனையானது. சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 6, 2024

யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு அழைப்பு: கலெக்டர் தகவல்

image

கரூர்: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த 100 மாணவர்களுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு ஓராண்டு பயிற்சி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு 21 – 36 வயது நிரம்பிய, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவையும் தாட்கோ வழங்கும். இதற்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம்.

News September 6, 2024

கரூரில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  தங்கவேல், தலைமையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள முதலமைச்சர் கோப்பை 2024-2025 க்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார்  உள்ளார்.

News September 5, 2024

EX அமைச்சர் தம்பி 2 நாள் சிபிசிஐடி விசாரணை

image

நில மோசடி வழக்கில் கடந்த இரண்டாம் தேதி சி பி சி ஐ டி போலீசார் முன்னாள் அமைச்சர் தம்பி எம்.ஆர். சேகரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். சிபிசிஐடி போலீசார்
காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

News September 5, 2024

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளியணை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட கடந்த 12.8.24 தேதி இரவு நடந்த கொலை மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த அலுவலர்கள் மற்றும் காவலர்களான , எழிலரசன், அன்புச்செல்வன், திருமுருகன், செல்லப்பாண்டி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார்.

News September 5, 2024

கரூர்: ரூ.101 கோடியில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

image

திருச்சி மாவட்டம் உன்னியூர் – கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே போக்குவரத்துக்கான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி ரூ.101.37 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாலப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

கரூரில் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், 7வது நபராக யுவராஜ் என்பவரை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜ், கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!