India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு ஜோதிமணி MP கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிகொடுக்காமல், அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளார். இது குறித்து அனைத்து கட்சி தலைவரும் விமர்சித்து வருகின்றனர்.
கரூர் கணபதிபாளையத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிற்கிணங்க இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.
கரூரில் 20.09.2024 மற்றும் 26.09.2024 இரண்டு நாட்கள் வெண்ணமலையில் மாவட்ட அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேற்காணும் முகாமிற்கு கரூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்று ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்:04324-257130 தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேட்டுத் திருக்காம்புலியூர் சாலையில் லாட தன்னாசி கோவில் அருகில் 0/6 ல் பால வேலை மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணியும் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து லாட தன்னாசி கோவிலின் அருகில் பொதுமக்களின் நலன்கருதி புதிதாக வேகத்தடை அமைக்கும் பணியும் முடிவுற்றது அதனை கோட்டப்பொறியாளர், ரவிக்குமார். உதவிக்கோட்டப்பொறியாளர் ஆனந்தக்குமார், அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நாளை 13ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் 2 தளத்தில் நிகழ்வு கூட்டம் நடைபெறவுள்ளது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
கரூரில், வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரக்கோரி கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் தம்பி M.R.சேகருக்கு வருகின்ற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்த அவரை மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கரூரில் , வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரக்கோரி கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் தம்பி M.R.சேகருக்கு வருகின்ற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி பரத்குமார் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை மூலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வெண்ணைமலை கரூர் வளாகத்தில் செப்.23 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிலற் பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தொலைபேசி 04324-299422,9443015914 வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
கரூர் மாவட்டத்தில் இன்று இம்மானுவேல் சேகரின் 67-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.V.செந்தில்நாதன் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர் சரண்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.