India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர், தாராபுரம் பகுதியில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யாவுக்கு ஆதரவாக திருமண மோசடியில் தோழியாக செயல்பட்ட தமிழ்ச்செல்வி இதுவரை தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை இன்று அனைத்து மகளிர் போலீசார் கரூரில் கைது செய்தனர்.
தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன ரெட்டியபட்டி, தோகைமலை, ஊமை உடையனுர், ஏ.உடையாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் மது விற்ற மலர்க்கொடி (39), சிவா (30), சாமிநாதன் (40), மாரியாயி (42) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சுகுணா, கடந்த ஆக.22ல் சின்ன வடுகப்பட்டியில் உள்ள இடத்தில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி (சர்வே எண் 569)கோவில் ஊழியர்களுடன் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முன்னாள் விஏஓ காமராஜ் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார். இதுகுறித்த புகார்படி வெங்கமேடு போலீசார் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதில் வங்கி சிவில் வழக்கு, காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 1,693 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இறுதியாக, 1,569 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 13 கோடியே 77 லட்சத்து 22ஆயிரத்து 117 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
கரூர்: ஆண்டாங்கோவில் பெரியார் நகரை சேர்ந்த ஜெகன்ராஜ் (32) பழநி ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த திருமணமான தனது சிறுவயது தோழிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் இளம்பெண் வீட்டுக்கு சென்று இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் ஜெகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் நான்கு அமர்வுகளும், குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வு மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வு என மொத்தம் 8 அமர்வுகளில் நடைபெற்றது.
கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளருடன் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இணையதளம் மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தல், மேலும் ஆதார் கார்டு, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு சான்றிதழ், போன்றவற்றை www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். இந்த தளம் முற்றிலும் இலவசமானது.மேலும் விவரங்களுக்கு 9499055912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தின் காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பணி செய்யும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கரூர் வனக்கோட்டம், கதவு எண்-44, பூங்கா நகர் பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர்- 639005 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ செப்-18 ஆம் தேதிக்குள் உங்கள் தகவலை அனுப்ப வேண்டும்.
Sorry, no posts matched your criteria.