Karur

News September 18, 2024

கரூர் கலெக்டர் முக்கிய தகவல்

image

கரூர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் செப்.22ல் 8,171 மரகன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் தோட்டக்கலைத் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இதர சமூக அமைப்புகளை கொண்டு 4,100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

போலீஸ் உத்தரவை மதிக்காத மினி பஸ் டிரைவர்கள்

image

கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பல இடங்களில் நிறுத்தி பயணியரை டிரைவர்கள் எற்றி செல்கின்றனர். இதனால் மினி பஸ்களை ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்தகூடாது என்று போலிசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அதை மீறி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து பயணிகள் அவதி அடைகின்றனர்.

News September 17, 2024

நாளை இலவச மருத்துவ முகாம்

image

புகலூர் காகித ஆலை சார்பில் 296வது இலவச மருத்துவ முகாம் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை முகாம் நடக்கிறது. டாக்டர்கள் சுகந்தி, மாலதி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர். இலவச மருத்துவ முகாமை சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 17, 2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்: கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் நாளை (18.09.2024) (புதன்கிழமை) கலெக்டர் தங்கவேல் தலைமையில் “உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாம்” நடைபெற உள்ளது. இது தொடர்பாக 10.09.2024 முதல் கரூர் வட்டத்தில் உள்ள கரூர், வெள்ளியணை, தோரணக்கல்பட்டி ஆகிய 3 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தகவல் கொடுத்துள்ளார்.

News September 17, 2024

கரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

கரூர் ஜவஹர் பஜார், உழவர் சந்தை, பேருந்து நிலையம், திண்ணப்பா கார்னர், மனோகரா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதையை சிலர் கடைகளை அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். .இதனையடுத்த நேற்று அதிகாரிகள், ஊழியர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

News September 17, 2024

கரூர் எஸ்பி மாணவர்களுக்கு நிதியுதவி

image

கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, (2023-2024) கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக, சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.30,000த்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேற்று வழங்கி பாராட்டினார்.

News September 16, 2024

கரூரில் இன்று 390 மனுக்கள் பெறப்பட்டன

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உதவி, குடும்ப அட்டை கோருதல் மற்றும் பிற மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 28 மனுக்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

News September 15, 2024

கரூர் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
➤கல்யாண ராணியின் தோழி தமிழ்செல்வி கரூரில் கைது.
➤சிந்தலவாடியில் வாழைத்தார் விலை உயர்வு
➤அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி விஏஓ மீது வழக்கு
➤கரூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,569 வழக்குகளுக்கு தீர்வு
➤ஊத்தங்கரைபட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.

News September 15, 2024

கல்யாண ராணியின் தோழி தமிழ்செல்வி கைது

image

திருப்பூர், தாராபுரம் பகுதியில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யாவுக்கு ஆதரவாக திருமண மோசடியில் தோழியாக செயல்பட்ட தமிழ்ச்செல்வி இதுவரை தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை இன்று அனைத்து மகளிர் போலீசார் கரூரில் கைது செய்தனர்.

News September 15, 2024

மது விற்ற 4 பேர் கைது – மது பாட்டில்கள் பறிமுதல்

image

தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன ரெட்டியபட்டி, தோகைமலை, ஊமை உடையனுர், ஏ.உடையாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் மது விற்ற மலர்க்கொடி (39), சிவா (30), சாமிநாதன் (40), மாரியாயி (42) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!