Karur

News September 21, 2024

கரூரில் சைக்கிள் போட்டி கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 28ஆம் தேதி பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ளதால் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்போட்டியில் முதல் 3இடங்கள் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கபட உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 21, 2024

கரூரில் மாமியார் கொலை: மருமகள் கைது

image

தென்னிலை வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர், மனைவி விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் பார்வதி, மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்ப தகராறு காரணமாக மருமகள் விஜயலட்சுமி, மாமியார் பார்வதியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை, தென்னிலை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

News September 21, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் EDII அகமதாபத்துடன் இணைந்து ” தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை (One Year Certificate Course in Entrepreneurship and Innovation) தொடங்கவுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொள்ளவும் 8668107552, 8668101638 என்று மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News September 20, 2024

கரூர் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கரூரில் வரும் 29இல் மாரத்தான் ஓட்டம்-ஆட்சியர் அறிவிப்பு
➤நாளை ஆண்டிசெட்டிபாளையம், மலைக்கோவிலூர், ரங்கநாதபுரம், தாளப்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை அறிவித்துள்ளது.
➤கரூரில் காரை திருடிய நபர் கைது செய்யப்பட்டர்.
➤கரூரில் கல்குவாரிகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
➤சத்ரு சம்ஹார மூர்த்தி 63வது ஆண்டு குருபூஜை நடைபெற்றது.

News September 20, 2024

கரூர்: பைக்கிலிருந்து விழுந்தவர் தீப்பற்றி எரிந்து உயிரிழப்பு

image

குளித்தலை அடுத்த வெள்ளமடைப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). இவர் ஒரு கேனில் டீசல் வாங்கிக்கொண்டு பைக்கில் வந்தபோது கீழே விழுந்தார். அப்போது டீசல் அவர் மீது விழுந்து, சாலை ஓரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ அவர் மீது பட்டு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர் .

News September 20, 2024

கரூரில் மாரத்தான் ஓட்டம்-ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி காலை 6 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்பவர் தங்களது ஆதார், வயதுசான்றிதழ், வங்கி கணக்கு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 5000 ,2 இடம் பரிசு 2000, 3ம் பரிசு 2000, 4-10 இடம் வருபவர்களுக்கு ரூ1000 வழங்கப்படும்.

News September 19, 2024

கரூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

image

கரூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை 19.09.2024 அன்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெறுகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 19, 2024

கரூரில் கொளுத்தும் வெயில்

image

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், இன்னும் சில நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

News September 19, 2024

கரூர் மாவட்டத்தில் 8171 மரக்கன்றுகள்: கலெக்டர் தகவல்

image

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் 8171 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, மற்றும் இதர சமூக அமைப்புகள் மூலம் 4100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

கரூரில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, பொதுமக்களிடம் இருந்து 19 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

error: Content is protected !!