India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளித்தலை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் டூவிலரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடலூர் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வேன் ஒன்று முருகானந்தம் புவனேஸ்வரி சென்ற டுவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம், உயிரிழந்தார். இந்த விபத்து குறித்தகுளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில் கோயில் அமைந்திருந்ததால், சிவபெருமான் கடம்பவனேஸ்வரர் என திருப்பெயர் ஏற்றார். சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு, மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இந்த கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. இங்கு, பெண்கள் தங்களது அனைத்து குறைகளும் நீங்க வேண்டிக்கொள்கிறார்கள்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டணியில் நேற்று விவசாயிகளை குறைதீர்க்க கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் விவசாயிகளின் தேவைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட 16 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். மார்ச்.24 கடைசி நாளாகும். விண்ணபிக்க இங்கே <
கரூர், மண்மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37); இவர் கடந்த, 17ல் அப்பிப்பாளையத்தில் உள்ள, உறவினர் வீட்டிற்கு சென்ற போது மொட்டை மாடி தடுப்பு சுவற்றில் அமர்ந்து செல் போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் தந்தோணிமலை போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரணை.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.03.2025) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப., விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ப.சிவானந்தம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று வேதியியல், கணக்கியல், புவியியல் பாடப் பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. கரூர் மாவட்ட அளவில் 45 மையங்களில் 4,741 மாணவர்கள், 5,470 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் தலைநகராக ஆட்சி செய்த ஊர் ’கருவூர்’ என்கிற என்கிற எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், கரூருக்கும் ரோமானிய பேரரசிற்கும் கூட ஒரு தொடர்பு உண்டு. ‘கோர்வோரா(Korevora)’ எனும் தென்னிந்தியாவில் உள்ள வர்த்தக நிலையம் பண்டைய கால ரோமாபுரி அரசிடம் வர்த்தகம் செய்துள்ளதாக கிரேக்க ஆய்வாளர் டால்மி குறிப்பிட்டுள்ளார். ஆம் அது ‘கரூர்’ தான்.
கரூரைச் சேர்ந்த தனது மனைவி ஆபாச படங்கள் பார்ப்பதால் விவாகரத்து கேட்ட கணவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம், ‘ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் போது பெண்களுக்கு மட்டும் அதற்கு தனியுரிமை இல்லையா..?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது கணவனை துன்புறுத்து குற்றம் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் தாட்கோ & சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவு தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி பெற மாணவர்கள் மட்டும் www.tahdco.com தாட்கோ இணையதளத்தில் முகவரியில் பதிவு செய்ய வேண்டும். நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், தேர்வுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.