Karur

News April 17, 2025

போக்சோ கைதிக்கு நீதிமன்றம் தண்டனை !

image

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அப்துல் சமத் (59) என்பவர் மீது கரூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று(ஏப்.16) கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

News April 16, 2025

சிறுமி பாலியல் வழக்கில் 6 நபர்களுக்கு அதிரடி தீர்ப்பு 

image

கரூர், ராயனூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த வழக்கில் கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நிஷாந்த், அரவிந்த் ஆகியோர்களுக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத், பார்த்திபன் ஆகியோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதத்துடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

கரூா் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண வெங்கட்ரமணர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 16, 2025

கரூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கரூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <>லிங்கை க்ளிக்<<>> பண்ணுங்க.

News April 16, 2025

பூசாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது 

image

கரூர் : மண்மங்கலம், பள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (64) . கோயில் பூசாரியான இவர் கடந்த 13 ஆம் தேதி குமரன் பேக்கரி அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த யுவன்ராஜ் மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.300 பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News April 15, 2025

கரூரில் இலவச கூடைப் பந்து பயிற்சி !

image

கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் இன்று(ஏப்.14) முதல் மே.15ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 6 – 18 வயது உட்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 989497960 என்கிற எண்ணை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

News April 15, 2025

கரூரில் மழை பெய்யப் போகிறதாம் குடை முக்கியம்

image

கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு இடங்களிலும், கனமான மழையும் லேசான மழையும் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல பகுதியில் இன்று (ஏப்ரல் 15) இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

News April 14, 2025

கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

image

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2025

கரூரில் ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் அட்டை பயோமெட்ரிக் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை(ஏப்.15) முதல் தொடங்குவதாக கரூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தமிழனின் இன்று தெரிவித்துள்ளார் . ஆதார் விதிமுறைப்படி 5 மற்றும் 15 வயது கடந்த பள்ளி மாணவர்கள் தங்களின் கைரேகை மற்றும் தற்போது புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

error: Content is protected !!