India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி அக்.3 முதல் 6ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. சஞ்சீவ் , பயிற்சியாளர் சென்சாய், தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர். சஞ்சீவ் சண்டை பிரிவில் 2 இடம், கட்டா பிரிவில் 3 இடத்தில் வெற்றி பெற்றார். கியூகுஷின்ரியூ உலகப் போட்டி வரலாற்றில் பரிசு பெற்ற முதல் இந்தியர் இவராவார். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவர் மற்றும் பயிற்சியாளருக்கு வாழ்த்துகளை கூறினார்.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1.வெண்ணமலை கோயில் நிலத்தை பாதுகாக்க எம்பி இடம் மனு அளிக்கப்பட்டது.
2.பள்ளப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாய்களை கட்டுப்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம்
3.முதலமைச்சர் விருதுக்கான விண்ணப்பிக்க நாட்கள் அதிகரிப்பு
4. புகையிலை விற்ற நாதிபட்டி பேக்கரி கடை உரிமையாளர் கைது
5. குளித்தலை அருகே ஆடுகளை பைக் மூலம் திருடிய 2 பேர் கைது
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-இல், கரூர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
கரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 9.80 மி.மீ, அனைப்பாளையத்தில் 26.20 மி.மீ, க.பரமத்தியில் 31.40 மி.மீ, கிருஷ்ணராயபுரத்தில் 2.60 மி.மீ, மாயனூரில் 2.00 மி.மீ, பஞ்சபட்டியில் 4.20 மி.மீ, கடவூரில் 16.00 மி.மீ, குளித்தலையில் 21.20 மி.மீ, அரவக்குறிச்சியில் 13.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில அளவிலான விளையாட்டு விருதுகள் ( 2 ஆண்டுகளுக்கு 2022-2023 முதல் 2023-2024 வரை) இத்திட்டத்திற்கு விண்ணப்பித்திட அக்.21ஆம் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நவ.11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை தலைமையகம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவ.15 என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
1.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
2.இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
3.கரூரில் இரு சக்கர வாகனத்தை திருடிய இருவர் கைது
4.கரூர் அருகே கஞ்சா விற்றவர் அதிரடி கைது
5.கரூரில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு வட்ட வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணராயபுரம் அருகே கோவக்குளம் அரசு மருத்துவமனையில் இன்று கடைசி நாளாக நடைபெற இருக்கிறது. அது சமயம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர், கடவூர் தாலுகா ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேஸ்புக் கணக்குகள் வாயிலாக அவதூறு பரப்பி வந்துள்ளனர். இதுகுறித்து திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் 2 பேர் மீது நேற்று வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை இன்று முதல் மேற்கொள்ள உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக கரூர் மாவட்டத்தில் 3,78,121 குடியிருப்புகளில் இக்கணக்கெடுப்பை நடத்த 118 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 24 கால்நடை மேற்பார்வையாளர்களைக் கொண்டு கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு துல்லியமான விபரங்களை அளித்திட வேண்டும்.
Sorry, no posts matched your criteria.