India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கோணிச்சிப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா (42), கோபாலகிருஷ்ணன் (23), ராகுல் (30), திருப்பதி (54) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் சீட்டு கட்டுகள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும், வரும் 27.10.2025 (திங்கள்) மற்றும் 28.10.2025 (செவ்வாய்) இரண்டு நாட்களில், வார்டு உறுப்பினர்கள் தலைமையில், மாநகராட்சி அலுவலக கூட்டுநர்கள் மூலம் குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக்கூட்டம் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகளை நடத்த அனுபவம் மற்றும் திறமைமிக்க பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் 04.11.2025 தேதிக்குள் சுயவிவரக் குறிப்புகளுடன் (Bio-Data) நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)

கரூர் மாவட்டத்தில், நவம்பர் மாதத்துக்கான ரேஷன் அரிசியை தற்போது (அக்டோபர் மாதத்தில்) பெறலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுவினியோக திட்ட அட்டையாளர் குடும்பங்கள் சிரமம் அடையாத வகையில் அரிசியை இம்மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத அரிசியை பெற்றிருந்தாலும், பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீட்டை இம்மாதமே பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தவெக தரப்பில் 20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் ஓட்டலில் நாளை விஜய் சந்தித்து பேசுகிறார். மேலும் காயமடைந்தவர்களுக்கும் அவர் நிவாரணம் வழங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் காலனி அடுத்த வெள்ளமடை பகுதியைச் சேர்ந்தவர் வைரன் மகன் அய்யர் 52. கூலித் தொழிலாளியான இவர் சேப்ளாப்பட்டி இரட்டை வாய்க்கால் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மது விற்ற அய்யர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம் சேப்ளாப்பட்டி அருகே வெள்ளமடைவில் வசிக்கும் வைரன் மகன் அய்யர் (52) கைது செய்யப்பட்டார். நங்கவரம் போலீசார் செய்த சோதையிடத்தில், அவரிடமிருந்து சட்டவிரோதமாக பதுக்கி விற்ற 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.