India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <

கரூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

கரூர் உழவர் சந்தையில் இன்று (01.12 .2025) திங்கட்கிழமை காய்கறி மற்றும் பழங்களுக்கான தினசரி விலை பட்டியல் வெளியிடப்பட்டது. தக்காளி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் முதல் வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் வரை தரம் 1 மற்றும் தரம் 2 விலையில் பட்டியல் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர், ராமகிருஷ்ணாபுரம் C.S.I. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் பத்ரிநாத். மல்யுத்தம் போட்டியின் 55 கிலோ பிரிவில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அவருக்கு நினைவுப் பரிசும் பதக்கமும் வழங்கி பாராட்டினர்.

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <

சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1073
பேரிடர் மேலாண்மை உதவி: 1078
பெண்களுக்கான உதவி எண்: 1091
பெண்களுக்கான உதவி எண் (வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க) : 181
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க: 1098
சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363
காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094

குளித்தலை அருகே நெய்தலூர் காலனி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முதலைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (31), பெரியபனையூரை சேர்ந்த ஏழுமலை (57) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (01.12.2025) தொடங்கின. டிசம்பர் 2025 முதல் மே 2026 வரை நடைபெறும் ஆறு மாத பயிற்சி, TNPSC Group I, II, IIA, IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள முன்பதிவு forms.gle/p4rp29kbe8PXqvet9 மூலம் செய்யலாம். மேலும் இந்த எண்ணை 63830-50010 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

கடவூர், தென்னிலை அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் நேற்று தனது பைக்கில் திருமலைபாளையம் சாலையில் சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் தாந்தோணி மலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் (56), முத்துலாடம் பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத ராயல் என்ஃபீல்டு புல்லட் மோதி நிற்காமல் தப்பியது. இதில் அவர் தலை மற்றும் கழுத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.