India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலை 10 மணிக்கு ஆலயங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசுக்கு பாராட்டு விழா அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாதோவ் மாஞ்ஜி இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனம் அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இதனால் விரக்தி அடைந்த அவர் அஞ்சு கிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினார் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினார்
வன்னியூர் பரகுன்று பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பென்சி லின்டா(25) நேற்று 25ஆம் தேதி மர்ம காய்ச்சல் காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் பரகுன்று கிராமத்தில் இன்று 26ஆம் தேதி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று, அங்குள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 1.25 லட்சம் மல்பரி நாற்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மாநிலத் திட்டத்தின் கீழ் பட்டு கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அலங்கார பூக்கள், மாலை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று ஆட்சியர் அழகு மீனா கூறினார்.
கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி ஊழியர்கள் கீரிப்பாறையில் காலை 9 மணிக்கு ரப்பர் தொழிற்சாலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். புன்னைநகர் லூர்து அன்னை ஆலயத்தில் ஜெபமாலை புகழ்மாலை 6.30 மணிக்கு திருப்பலி 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக வின் ஒரே எம்எல்ஏவாக இருக்கிறார் மனோ தங்கராஜ். முதலில் அமைச்சராக இருந்த அவர் திடீரென்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். குமரி மாவட்டத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் தமிழக அமைச்சரவையில் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே தமிழக அமைச்சரவை ஆறாவது முறையாக மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் மனோ தங்கராஜ்க்கு மீண்டும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 99 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <
குமரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் டிராக்டரால் இயங்கக்கூடிய சுழல்கலப்பை 5, கொத்துக்கலப்பை 9 உள்ளிட்ட கருவிகள் டிராக்டருடன் குறைந்தது 2 மணி நேரமும், அதிகபட்சமாக 20 மணி நேரமும் முன்பணமாக செலுத்தி வாடகைக்கு பெறலாம். டிராக்டர் (இணைப்புக்கருவிகள் உட்பட) மூலம் 1 மணி நேரம் பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.500 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோவில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கும் போது அருகில் செல்லும் மின் கம்பிகளை கவனத்தில் கொண்டு போதிய இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். பந்தல் அமைக்கும் போது அலங்கார விளக்குகள் அமைக்கும் போதும், உயரமான ஏணியை பயன்படுத்தும் போது மின் கம்பிகளில் உரச வாய்ப்பிருப்பதால் கவனமாக கையாள வேண்டும் என்றார்.
குமரி மாவட்ட தபால் துறையில் கிராமிய தபால் ஆய்வு காப்பீடு திட்டத்தில் ரூ.178 கோடியும், தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.275 கோடியும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக 13,000 பயனாளிகள் காப்பீடு செய்து இணைந்துள்ளனர். ஆதார் பதிவு, திருத்த சேவைகள் மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பயனாளிகளும், புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18,484 பயனாளிகள் பயன் அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.