Kanyakumari

News April 28, 2025

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ் 

image

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி பொறுப்பேற்கிறார்.

News April 28, 2025

இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்

image

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று 27ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 28, 2025

மத்திய அரசுக்கு மனோ தங்கராஜ் கேள்வி

image

பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கு குமரி மாவட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல? 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 27, 2025

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

image

காட்டுவிளை பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்தை, வாலிபர் ஒருவர் வழிமறித்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்துள்ளார். இதுகுறித்து, பஸ் ஓட்டுநர் ராஜேஷ்குமார், கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜோயல் ராபர்ட் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது 4 பிரிவுகளில் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

News April 27, 2025

மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்

image

அஞ்சுகிராமத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 27, 2025

குமரியில் பொது இடத்தில் மது அருந்திய 742 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் பொது இடத்தில் மது அருந்தியதாக 742 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.

News April 27, 2025

குமரி அருகே ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி

image

தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. எண்ணெய் & எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு குமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

குமரி மாவட்டத்தில் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1 மணி வரை மழை நீடிக்கவுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News April 27, 2025

வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முகாமை எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 30 டாக்டர்கள் அடங்கிய குழு அவர்களுக்குபல்வேறு வகையான உடல் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News April 27, 2025

தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6ஆயிரம் 

image

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தபால் தலை சேகரித்து வைத்திருக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க 

error: Content is protected !!