India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில், பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திர திறப்பு விழா நாளை (நவ.13) காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இதனை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
குமரியில் 1330 குறள் தந்த ஐயன் திருவள்ளூர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதையடுத்து, வெள்ளி விழா கொண்டாட கூடிய வகையில் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு தேதிகளில் வெள்ளி விழா நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளாக கோட்டார் கவிமணி அரசு தொடக்கப்பள்ளி, சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளி, சுசீந்திரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் கற்றல் திறன், புதிய உத்திகளை கடைபிடித்தல் உட்பட பல்வேறு தரக்குறியீடுகளின் அடிப்படையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி நேற்று(நவ.,11) கூறியுள்ளார்.
குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர் பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்காமல் உள்ள மாற்றுத் திறனாளிகள் நவ.,20-க்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆர்.சி.புக், இன்ஸ்யூரன்ஸ், போட்டோ, ஆதார் உட்பட உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். SHARE IT.
அதிமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு நடத்துவதற்கு மேலிட நிர்வாகிகளை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக்காக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, அருணாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்.
ஆசாரிப்பள்ளத்தில் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மருத்துவப் பிரிவுகள் செயல்படுகின்றன. தினமும் 2,000 வெளி நோயாளிகள், 1,000 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்காக இந்த ஆண்டு இதுவரை ரூ.12 கோடி மதிப்பில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
# சுற்றுலாத்துறை அமைச்சர் குமரி மாவட்டம் வருகை. # சீமான் குமரி மாவட்டம் வருகை. # காலை 10 மணிக்கு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐஎம் சத்தியாகிரகம். # காலை 10:30 மணி குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 மற்றும் படி வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். # காலை 10 மணி திக்கணக்கோடு நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டம்.
EVM- ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி குமரியில் 07.11.24 அன்று நடைப்பயணம் தொடங்கிய நந்தினி-குணா இருவரும் அன்றையதினம் கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காஷ்மீருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற அவர்களை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர்.
மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 7 மாத பெண் குழந்தை நேற்று இரவு தாயின் கம்மலில் தொங்கிக் கொண்டிருந்த டாலரை விழுங்கிவிட்டது. இந்த டாலர் குழந்தையின் உணவு குழாய் மூச்சுக் குழாய் சந்திக்கக்கூடிய இடத்தில் சிக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது. இன்று காலை எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டாலர் அகற்றப்பட்டது.
சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் நாளை (நவ 12) காலை 7.00 மணிக்கு சிற்றார் அணை சுற்றுலா வளர்ச்சி திட்ட மேம்பாட்டு பணிகளையும், காலை 8.00 மணிக்கு கடையால் சுற்றுலா படகுத் துறையையும், காலை 8.45 மணிக்கு திற்பரப்பு நீர்வீழ்ச்சி திட்டப் பணிகளையும், காலை 9.30 மணிக்கு மாத்தூர் தொட்டில் பாலத்தையும், காலை 11.00 மணிக்கு முட்டம் கடற்கரை மற்றும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
Sorry, no posts matched your criteria.