India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜேஷ், தென்காசி மாவட்ட இளைஞர் நலம் மற் றும் விளையாட்டு துறை அதிகாரியாக மாற்றப்பட்டார். தென்காசி மாவட்ட விளையாட்டு துறை அதிகாரியாக இருந்த ரெத்தினபாண்டியன், குமரி மாவட்ட விளையாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று(நவ.,13) பிறப்பித்துள்ளது.
#இன்று(நவ.,14) காலை 10 மணிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம். #காலை 10 மணிக்கு தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு நடை பேரணி.#மாலை 5.30 மணி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.
குமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ.,16ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி லாட்ஜ் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுடன் கலந்தலோசனை கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் லாட்ஜ் உரிமையாளருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் நவ.15ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.குமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.10, + 2,Diploma, I-ITI கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களோ, காணி குடியிருப்பைச் சார்ந்த பழங்குடியினரோ வெளிநபர்களை அனுமதியின்றி வனப்பகுதிக்குள் அழைத்து வந்து தவறான நிகழ்வுகள் ஏதும் நிகழாத வண்ணம் இருக்க வேண்டும். மீறுகிறவர்களுக்கு 1882 தமிழ்நாடு வன சட்டம் மற்றும் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.
குளச்சலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குமரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2006 ஆம் ஆண்டு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி & ஊராட்சிகளில் பணிபுரியும், சொந்த வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குமாரபுரம் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உட்பட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று கூறியதாவது, போதைப்பொருள் விற்பனை மாவட்டத்தில் தற்போது கட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 94 கஞ்சா, 2 போதை மாத்திரை விற்பனை, ஒரு போதை ஊசி வழக்கு பதிவாகியுள்ளது. 30 கிலோ கஞ்சா, 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 160 பேர் கைதாகி உள்ளனர் என்றார்.
#இன்று(நவ.,13) காலை 8 மணிக்கு ராமன்புதூர் சந்திப்பில் இருந்து அண்ணா விளையாட்டரங்கம் வரை சிபிஐஎம் மத்திய அரசை கண்டித்து வாகன பிரச்சாரம். #10 மணிக்கு குமரி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் அஞ்சல் துறை சார்பில் கருத்தரங்கம். #குமரி கருத்தரங்கம். #திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவம் விழா.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில், பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திர திறப்பு விழா நாளை (நவ.13) காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இதனை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.