Kanyakumari

News November 15, 2024

விரைவில் வருகிறேன் எனக் கூறியவர் காணமல்போன சோகம்!

image

குளச்சல் கடலில் காணாமல்போன ஆரோக்கிய ஜூடின் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் தொடர்ந்து இடி – மின்னல் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் வீட்டில் மனைவியை செல்போனில் தொடர்புக்கொண்டு, இங்கு பயங்கரமாக இடி மின்னல் இருக்கிறது. வீட்டில் உள்ள மின்சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்து வை. நான் விரைவில் கரைக்கு திரும்பி வருகிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

News November 15, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இரணியல் ஒடுப்பாறை நாகரம்மன் கோவில் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் அன்னதானம். #புவியூர் சிவசக்தி ஆலயத்தில் மதியம் 12.30 மணிக்கு சிவசக்தி, குருசாமி செங்கிடாகாரசாமிக்கு தீபாராதனை, மதியம் 2 மணிக்கு சந்தி காத்த பெருமாளுக்கு தீபாராதனை. #உசரவிளை சுவசுடலைமாட சாமி கோவிலில் காலை 8.30 மணிக்கு பரிவார மூர்த்திகள், கோபுர கலசங்கள், மூல மூர்த்திகளுக்கு ளுக்கு கும்பாபிஷேகம் ஆகியன நடைபெறும்.

News November 15, 2024

17 ஆயிரத்து 986 மனுக்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்

image

நிதி மற்றும் காலநிலை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 38 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 25,186 மனுக்கள் பெறப்பட்டு அதில் 17 ஆயிரத்தி 986 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் மற்றும் பயன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

News November 15, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காளிகேசம் காளியம்மன் கோவிலில் காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம். 10 மணிக்கு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்.  #தோட்டியோடு மவுனகுரு சுவாமி கோவிலில் காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம். மதியம் 12.30 மணிக்கு கோமாதா பூஜை. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு நிலா பூஜை ஆகியன நடைபெறும். #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாலை 5 மணிக்கு ஜெபமாலை. இரவு 7 மணிக்கு கொடியேற்றுதல். 

News November 15, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பார்வதிபுரத்தில் தர்ணா போராட்டம். #போதைக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் சௌமியாபுரம் பள்ளிவாசல் முன்பு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் நடக்கிறது. #மாலை 4 மணிக்கு பார்த்தசாரதி கோவில் சிலை கொள்ளை குறித்து பார்த்தசாரதி கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம். 

News November 15, 2024

குமரியில் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

குமரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெற விரும்புவோர் தங்களை பற்றி முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை வரும் 22 ஆம் தேதிக்குள் குமரி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்பிக்கலாம். SHARE IT.

News November 14, 2024

மும்பையில் விஜய் வசந்த், திருமாவளவன் பரப்புரை

image

மும்பை தாராவி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி கைக்வாட் ஆதரவாக அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம். பி மற்றும் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம் பி ஆகியோர் இணைந்து இன்று (நவம்பர் 14) தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். உடன், திரளானோர் கலந்துகொண்டனர்.

News November 14, 2024

அமைச்சர் தங்கம் தென்னரசு குமரி வந்தார்

image

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிற்பகல் 2 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருதுநகர் மாளிகைக்கு வந்த அவரை, கலெக்டர் அழகு மீனா, போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மேயர் மகேஷ், ஒன்றிய செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் வரவேற்றனர்.

News November 14, 2024

பாஜகவினர் 18 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு

image

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் பாஜக நகர செயலாளர் சுமன் உட்பட 18 பேர் ஒன்று கூடி எந்தவித போலீஸ் அனுமதியும் இல்லாமல் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து சுமன், சுஜன் ராஜ், பிரதீஷ் விஜி ராஜு பால் மனோஜ் சீமா நந்தினி மற்றும் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 14, 2024

கிள்ளியூர் அருகே வெடி பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

image

புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் கிள்ளியூர் அருகே கொல்லன்விளை என்ற இடத்தில் ரோந்து சென்றார். அப்போது, அங்கு வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 10 கிலோ வெடி உப்பு, எட்டரை கிலோ சல்பர் மிக்ஸிங் வெடி மருந்து, ஏழரை கிலோ 28 வெடி குச்சிகள் உள்ளிட்ட வெடி மருந்துகளை கைப்பற்றினார். இது தொடர்பாக செல்வராஜ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தார்.