Kanyakumari

News November 9, 2025

BREAKING: குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதற்கு ஏற்ப உங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. இதேபோல் குமரி மாவட்டத்திற்கு நவ.12, 13 அன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT

News November 9, 2025

குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 9, 2025

குமரி: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் நேசமணி(62). 2020-ம் ஆண்டு இவர் அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தரய்யா, நேசமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News November 9, 2025

குமரி: விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

image

திற்பரப்பு பழைய பாலம் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நவ.5-ம் தேதி வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது மோதியுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிட்சை பலனளிக்காமல் இன்று (நவ.8) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

குமரி: இளம் பெண் தற்கொலை

image

கீழமறவன் குடியிருப்பு  டெம்போ டிரைவர் செல்வசரண் மற்றும் ரேஷ்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்தனர். கடந்த நவ.6ம்தேதி  கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து கோட்டார் போலீசார் விசாரணை. 

News November 8, 2025

குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 8, 2025

குமரியில் கிடுகிடுவென உயர்ந்த தேங்காய் விலை

image

குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி தேங்காய் மிகவும் பிரபலம் ஆகும். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான சமையல் தேங்காய் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. சந்தையில்  கடந்த மாதம் வரை கிலோ ரூ. 55 க்கு விற்பனையான தேங்காய் தற்போது ரூ. 65 விலையில் விற்கப்பட்டுகிறது. சில்லறை கடைகளில் ரூ.68 வரை விலைக்கு போகிறது.   தேங்காய் விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறினார். 

News November 8, 2025

குமரி: ஊராட்சியில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., உடனே APPLY

image

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 09) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News November 8, 2025

குமரியில் மீனவர்கள் கவலை

image

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக  அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

News November 8, 2025

குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

image

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!