India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் சந்திப்பில் இன்று கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகாமையில் இருந்த வீட்டின் மதில் சுவரை இடித்து நின்றது. இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

நாகர்கோவில் மேலராமன்புதூரை சோ்ந்த அசோக்(28), அயனிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அசோக்கிற்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதை மனைவி கண்டிக்கவே, நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கர்ப்பிண என பாராமல் அசோக் ராஜேஸ்வரிதை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அசோக்கை கைது செய்தனர்.

மார்த்தாண்டம் அடுத்த பழுக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (40) எலக்ட்ரீசியன், இவரது மனைவி சித்ரா தேவி (36) வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகியமண்டபம் சந்திப்பில் இன்று(மார்ச் 28) காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குமரி மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜய் வசந்த் எம்பி போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சியினருடன் கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் விஜய் வசந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த செல்லசாமி காங்கிரஸ் சட்டக் சபை கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்த வகையில் விளவங்கோடு சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வி எஸ் நந்தினி விளவங்கோடு தேர்தல் பொறுப்பாளரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குளச்சல் அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) தனுஷ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தை ஆகாஷ், தனுஷ் ஆகியோர் கம்பி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணவாளகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.