India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் அருகே தலைமை ஆசிரியை ஒருவரின் செயினை பறித்த வழக்கில் தந்தை-மகன் ஆகியோரை நேற்று(ஏப்.23) போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மாங்கோடு பகுதியை சேர்ந்த சிவா, அவரது தந்தை சிவசங்கர் என தெரிந்தது. தொடர்ந்து, இருவரும் சேர்ந்து ராஜாக்கமங்கலம் பகுதி வீடுகளில் திருடிய டிவி, குத்துவிளக்கு, கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் இருளப்பபுரம் பகுதியில் கோட்டார் காவல் நிலைய போலீசார் நேற்று(ஏப்.23) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகமது இம்ரான்(20), இப்னு நிஹால்(24) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ போதை பொருளை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்(ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (21-4-24) மினி பேருந்து ஒட்டுனர்களிடையே ஒருவருக்கொருவர் முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் மினி பேருந்து ஒட்டுனர் மணிகண்டன் என்பவரை மற்றொரு மினி பேருந்து ஒட்டுனர் வைகுண்டன் இரும்பு கம்பியால் தாக்கியதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் மண்டைக்காடு முருகேசன் – மகேஸ்வரி தம்பதியின் மகள் ஹரிஷ்மா தேவிக்கும், அம்மாண்டிவிளை அருள்துரை – கங்காவதி தம்பதியரின் மகன் அருண் பிரகாசுக்கும் நேற்று(ஏப்.21) கருமண் கூடலில் திருமணம் நடந்தது. பின்னர் புது மணத்தம்பதிகள் காளை மாட்டு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர். இதை பலரும் வரவேற்றனர்.

குமரி மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ள ஆறுகாணி காளிமலை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனை நேற்று(ஏப்.21) நடைபெற்றது. இந்து கோயில் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற லட்சார்ச்சனையில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாமம் சொல்லி குங்குமத்தால் லட்சார்ச்சனை செய்தனர்.

குமரி மாவட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளான நாளை(ஏப்.23) காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. வெள்ளி அங்கி சார்த்தி சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் நேற்று(ஏப்.21) மாலை பெய்த பலத்த மழையில், சமத்துவபுரம் பகுதியில் நின்ற பலாமரம் முறிந்து விழுந்தது. அப்போது, இடலாக்குடியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கார் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பெண்கள் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சேர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.

திருவட்டார் சாரூரை சேர்ந்தவர் தாசம்மாள் வயது( 80). இவரது மகன் புஷ்பராஜ் இறந்ததால் பேரன் அஜித் (23) தாசம்மாளுடன் வசித்து வந்தான். பெயின்ட் கடை ஊழியர் அஜித் நேற்று தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் சொத்தை தன் பெயருக்கு எழுதி கேட்டு போதையில் தாசம்மாளை பிடித்து தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு இறந்து போனார். இதில் பயந்த அஜித் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
Sorry, no posts matched your criteria.