India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டம் சேனவிளை பகுதியில் இரு அரசு பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி வழியாக இயங்கி வந்த 3 அரசு பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்தி, தனியார் வாகனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டி பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அறப்புரை ஊர் அருள்மிகு ஸ்ரீ வாதையன் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று(ஏப்.26) அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் ஐயப்பன் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழக எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் செக்போஸ்ட் அமைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான படந்தாலுமூடு செக் – போஸ்டில் இந்த முகாம் துவங்கப்பட்டுள்ளது. முகாம் 90 நாட்கள் செயல் படும் என அறிவித்துள்ளது.

வீயன்னூர் பிலாவிளையை சேர்ந்த செல்வராஜ் மனைவி ஸ்டெல்லா பாய் (44). இவர்கள் மகள் அபிதா, மருமகன் அஜின் (27) 14 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்த பின் புதுகாடுவெட்டி விளை ஜாண் கிறிஸ்டோபர்(39), ஸ்டெல்லாபாய்க்கு உதவியாக இருந்துள்ளார். முன் விரோதத்தில் நேற்று நள்ளிரவு ஜாண் கிறிஸ்டோபர் ஆசிட்டை ஸ்டெல்லா பாய், அஜின் மீது ஊற்றியதில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை(ஏப்.27) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வெட்டுவெந்நி, சென்னித்தோட்டம், பல்லன்விளை, புளியன்விளாகம், காரவிளை, மலையரம், கல்லறவிளை, ஆலம்பாறை, விளசேரி, குழிச்சாணி, அம்பேற்றின்காலை , மணலுக்காலை , சாணி, மலையடி, தகரவிளை, புரவூர், மணிவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குளச்சல் கொட்டில்பாடு கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெர்லின் ராணி(38). இவர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த அருள்சீலி பொருளாளராக உள்ளார். ஜெர்லின் ராணி இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அருள்சீலியுடன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.25) ஜெர்லினை, அருள்சீலி உட்பட 5 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக குளச்சல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, அசாதாரண உயிரிழப்புகள் (மனிதர்கள்/ பறவைகள்) போன்ற தகவல்களை தாங்களாகவே முன்வந்து https://lhip.mahfw.gov.in/cbs/-1/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அரசுக்கு தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதின் மூலம் பொது சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க இயலும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இருமாநில எல்லை பகுதிகளில் தீவர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகள் ஏற்றி குமரி மாவட்டத்தில் போட வந்த மெர்சடிஸ் பென்ஸ் லாரியை மார்த்தாண்டம் பகுதியில் பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

புயல், கடல் சீற்றம் போன்ற வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கை தகவல்களை ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வரும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி சிம்கார்டு ரீசார்ஜ் வசதியை அரசு நிறுத்தி உள்ளதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் எங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக வள்ளவிளை மீனவர்கள் இன்று ஏப்-24 ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கேரளாவில் உள்ள இந்துக்களால் போற்றப்படும் 108 சிவாலயங்களில் சுசீந்திரமும் ஒன்று. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் 30 சன்னதிகள் உள்ளன. மும்மூர்த்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இக்கோவில் 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழ் மற்றும் கேரள பாணி கட்டடக்கலையில் அமைந்துள்ளது தனி சிறப்பாகும். மேலும் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன.
Sorry, no posts matched your criteria.