Kanyakumari

News April 29, 2024

குமரி மாவட்ட நீதித்துறையில் வேலை!

image

குமரி மாவட்ட நீதித்துறையில் 65 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

குமரி: பத்மநாபபுரம் அரண்மனையின் சிறப்பு

image

தக்கலை அருகே பத்மநாதபுரம் என்னும் ஊரில் கிபி.1601 இல் வர்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டது. திருவாங்கூர் மன்னர்களின் உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

News April 29, 2024

குமரி அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

குமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35), கொத்தனார். இவரது வீட்டின் பின்பக்கம் மின் விளக்கு எரியாததால் சரிசெய்வதற்காக, ஜன்னல் மீது ஏறியுள்ளார். அப்போது ஜன்னல் சரிந்து ராதா கிருஷ்ணன் வயிற்றுப் பகுதியில் விழுந்தது. ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளிச் சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று காலை முதலே வரத் தொடங்கியுள்ளனர். சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மணிமண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்றும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

News April 28, 2024

குமரி மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 28, 2024

 முன்விரோதத்தில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு 

image

கருங்கல் கொல்லன்விளை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவருக்கும் ஐயன்விளையை ஜான் கோசி(34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று சதீஷ்குமாரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ஜான்கோசி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் சதீஷ்குமாரின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 28, 2024

கன்னியாகுமரி அருகே விபத்து

image

அருமனையை சேர்ந்தவர் விஜித் (20). பிளம்பர். நேற்று மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திருவரம்பு சிஎஸ்ஐ சர்ச் அருகில் விஜித்தின் கட்டுபாட்டை இழந்து சர்ச் அருகில் இருந்த வீட்டு காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

News April 28, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 27, 2024

நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம்

image

கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்ததாவது: நாகர்கோவில் பால்பண்ணை முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி நாளை முதல் 30 நாட்கள் நடப்பதால், பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து பால்பண்ணை, டெரிக், கலெக்டர் ஆபீஸ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையாக பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக செல்ல வேண்டும்

News April 27, 2024

காசியின் கூட்டாளி கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் கணேசப்புரத்தை சேர்ந்த நாகர்கோவில் காசி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த ராஜேஷ்சிங் என்பவர் துபாயில் ஓட்டுனராக வேலை பார்த்து தலை மறைவாக இருந்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய ராஜேஷ்சிங்கை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!