India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SMRV அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ITI பயிற்சியில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 9499055807, 04652-222569,9688333469, 9095680040, என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.Online மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 10.05.2024 முதல் 07.06.2024 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். நேரடியாக கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஊசி பாசி விற்பனை செய்யும் குறவர் சமுதாயத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற ஆந்திர மாநில பெண்மணியின் 7 வயது சிறுமி சங்கீதாவை காணவில்லை என குமரி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியில் சிறுமியை போலீசார் மீட்டு குமரி காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் காணாமல் போன 7 வயது சிறுமி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் 7 வயது மகள் நேற்றிரவு குமரியில் மாயமானர். இதுகுறித்து சிறுமியைச் தேட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், நெய்யாற்றங்கரை பேருந்து நிலையத்தில் அச்சிறுமியை போலீசார் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் மழை பெய்து வருகிறது. மழை 16ம் தேதி வரை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முக்கிய நீர் ஆதாரமான விளங்கும் பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 45 அடி நெருங்குகிறது. நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 9.50, 9.55அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44.50 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 47 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 1.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.06 அடி நீரும் இருப்பு உள்ளது.

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோடை கால பயிற்சி முகாமில் நடந்து வந்தது. இந்நிலையில் இதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் இன்று(13.05.2024) காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சான்றிதழ் வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.