Kanyakumari

News May 14, 2024

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

image

இன்று அதிகாலை சுமார் 4:30 மணிக்கு தக்கலை, மணலி பகுதியில் மாவட்ட
பறக்கும் படையினர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் ரோந்து சென்ற போது ஒரு டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது. அதிகாரிகள் டெம்போவை 3 கி.மீ தூரம் விரட்டியதும் டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
டெம்போவில் சுமார் 3 டன் அரிசி கேரளாவுக்கு கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து உடையார்விளை கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

News May 14, 2024

குமரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று (மே. 14) கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடயே 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News May 14, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும், குமரிக்கடல் பகதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News May 14, 2024

குமரி: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 10ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் குமரி மாவட்டம் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.29% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.69 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.79 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 14, 2024

பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம்!

image

குமரி மாவட்டத்தின் பிரசத்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவில் வைகாசி மாத விசாகப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடைபெற்ற கொடியேற்று விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ள பெருந்திருவிழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

News May 14, 2024

+1 RESULT:கன்னியாகுமரி 9ஆவது இடம்

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்கள் 90.28% பேரும், மாணவியர் 97.42% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 93.96% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் குமரி மாவட்டம் 9வது இடத்தை பிடித்துள்ளது.

News May 14, 2024

மழையால் குளிர்ச்சியான குமரி மாவட்டம்

image

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. மேலும் நேற்று, நேற்று முன் தினம் பெய்த மழை காரணமாக அணைகளிலும் தண்ணீர் வரத்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கோடை மழை காரணமாக குமரி மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

News May 13, 2024

பகவதி அம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம்

image

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை (மே.14) அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.

News May 13, 2024

கன்னியாகுமரி அருகே நடிகை நயன்தாரா

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களை இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் ஊழியர்கள் இருவரையும் வரவேற்றனர்.

error: Content is protected !!