India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி அறிவியல் பேரவையின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான இளம்விஞ்ஞானி விருது வழங்கும் விழா ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி அரங்கில் நாளை (18.5.24)) காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் முத்துநாயகம் இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முள்ளஞ்சேரி வேலையன் தலைமையில் குமரி அறிவியல் பேரவையினர் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கன்னியாகுமரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பொது ஏலம் விடப்படும். அந்த வகையில் போலீசாரால் பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 9 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(மே 16) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இன்று காலை முதலே மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

குமரி, மங்காடு ஊராட்சிக்கு, கீழ்கரிக்கல் பகுதியில் மே 11 அன்று இரவு டெம்போவில் கொண்டு வந்து கழிவுகளை கொட்டி சென்றனர். இது குறித்து நித்திரவிளை போலீசார் சிசிடிவியை ஆராய்ந்து, குப்பை கொட்டிச் சென்ற சங்குருட்டி பகுதியை சேர்ந்த டெம்போ உரிமையாளர் அஜீஸ் என்பவரை கண்டுபிடித்தனர். அதன்பின் ஊராட்சி நிர்வாகம் அஜீஸுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து கொட்டிய கழிவுகளை நேற்று(மே 16) அள்ளி செல்ல வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடியில் 7 செ.மீட்டரும், கொட்டாரம் பகுதியில் 5 செ.மீட்டரும், சிவலோகம் சித்தாறு-2 பகுதியில் 4 செ.மீட்டரும், நாகர்கோயில், காளியல்,பேச்சிப்பாறை, கன்னியாகுமரி, மாம்பழதுறையாறு ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

குமரி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளான கம்பளம், மீனாட்சி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மே 16) மாநகர ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் அபிசன்(26), மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம்(மே 15) குளச்சல் டாஸ்மாக்கில் மது அருந்தும்போது, செல்போனில் சத்தமாக பேசியுள்ளார். அருகில் இருந்த இருவர் மெதுவாக பேச கூறியதை அடுத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியே வந்த அபிசனை சிலர் தாக்கி செல்போனையும் உடைத்துவிட்டு தப்பியுள்ளனர். குளச்சல் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(மே 17), 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 10.07, 10. ஈ அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.04 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 47.02 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.5 அடி நீரும் இருப்பு உள்ளது.
Sorry, no posts matched your criteria.