India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பருவமழைக் காலங்களில் நியாயவிலை கடைகளில் நுகர்பொருட்கள் (ரேஷன் பொருட்கள் ) போதுமான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்வதோடு, அவற்றினை பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். மேலும் அதிகளவு நுகர்பொருட்கள் தேவைப்படுமனால் அவற்றினை இருப்பில் வைக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது விநியோகத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டடு இருந்தது. இதனால் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் செல்லும் சலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பாலத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், இன்று முதல் மீண்டும் மேம்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மழைக்காலத்தில் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள், விபத்துகள் ஏற்படும் போதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பேரிடர் மேலாண்மைப்பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண் 1750-க்கு தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என குமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரத்துறையினர் தயார் நிலையில் இருக்க குமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளவாது, தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், குமரி மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டு சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும். மின்கம்பி அறுந்து விழும் போது உடனடியாக சரிசெய்திடவும், மின்கம்பிகள் அறுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மே-19 வரை கனமழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஏற்று குளச்சல், கடியபட்டணம், முட்டம், தேங்காபட்டணம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் எவரும் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை.

குமரி மாவட்டத்தில் இன்று (மே.18) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் குமரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மருதூர்குறிச்சியைச் சேர்ந்தவர் எட்வின்ஜோஸ் மகள்
ஏஞ்சலின் லிபிகா. ஒன்றரை வயதில் நூறு சதவீத கண்பார்வை இழந்த இவர், +2 பொதுதேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தனியார் பள்ளியில் படித்தார். இவர் மாணவர்கள் மத்தியில் உதவியாளர் இன்றி தானே மடிக்கணினி மூலம் தேர்வு எழுதி 449 மதிப்பெண் பெற்றார். குமரி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பார்வையற்ற மாணவியான இவரை பலரும் பாராட்டினர்.

நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் பகலில் வியாபாரம் செய்து விட்டு இரவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தூங்குவார்கள். நேற்று இரவு பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தூங்கி கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் கோட்டார் பகுதியை சேர்ந்த வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றபோது பயணிகள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

குமி மாட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து அணைகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.