Kanyakumari

News May 30, 2024

குமரி : 3 நாட்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரியில் இன்று முதல் அடுத்து 3 நாட்களுக்கு (மே.30 – ஜூன்.1) மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் தெந்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 30, 2024

குமரி மழைப்பொழிவு விவரம்!

image

கன்னியாகுமரியில் நேற்று (மே.29) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முள்ளங்கினாவிளையில் 4 செ.மீட்டரும், பாலமோர், மாம்பழத்துறை, கோழிப்போர்விளை, அணைகெடங்கு, சின்னக்கல்லார், சுருளக்கோடு, குளச்சல், இரணியல், தக்கலை, அடையாமடை, முக்கடல் அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 30, 2024

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட வந்த 2 பேர் கைது

image

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட வந்த நந்தினியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனாவையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு தக்கலைக்கு அழைத்து சென்றுள்ளனர். கன்னியாகுமரியில் இவர்கள் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

News May 30, 2024

குமரியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

image

தென்கிழக்கு அரபிக் கடலில் மேல் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இன்றிலிருந்து (மே.30) தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரபிக்கடலை ஒட்டிய கன்னியாகுமரி பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 30, 2024

பிரதமர் தியானம் :  கலெக்டர் விளக்கம்

image

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

குமரி: கவுன்சிலரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

image

குமரி மாவட்டம் சுசீந்திரம் வழுக்கம் பாறையை சேர்ந்தவர் இருதயராஜ்(57). குலசேகரபுரம் பஞ்சாயத்து கவுன்சிலரான இவர் நேற்று(மே 29) நல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது புத்தன் துறை அருண்குமார்(21), கோட்டார் ஜெரின் (24), நன்றிகுழி அஜித் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மது குடிக்க ரூ.500 பறித்து சென்றனர். இது குறித்த புகாரில் சுசீந்திரம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

News May 30, 2024

குழந்தைகளை வேலையில் அமர்த்தினால் அபராதம்

image

நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பணியில் இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம், 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். இது குறித்து 1098, 04652 – 229 077 எண்ணிலும் புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

News May 29, 2024

கன்னியாகுமரி கோவிலில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

image

பிரதமர் மோடி நாளை (30)மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று (29) கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர் .

News May 29, 2024

புதுமைப்பெண் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் 
புதுமைப்பெண் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1,000/- அவர்களின் வங்கி
கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் 161 கல்லூரிகளிலிருந்து 3693 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

கன்னியாகுமரியில் டிரோன் கேமரா பறக்க தடை

image

பிரதமர் நரேந்திரமோடி தியானம் மேற்கொள்வதற்காக நாளை  கன்னியாகுமரி வருகிறார். தொடர்ந்து மே.30, 31, ஜூன்.1 ஆகிய தேதிகளில் குமரியில் தங்குகிறார் இதனை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யும் 3 நாட்களும் டிரோன்கள் பறக்க குமரி மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

error: Content is protected !!