Kanyakumari

News June 4, 2024

ELECTION: கன்னியாகுமரியில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 65.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்.,சார்பில் விஜய் வசந்த், அதிமுக சார்பில் பசிலியா நசரேத், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2021 கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத் தேர்தலில் , திமுக – காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட விஜய் வசந்த் 1,37,950 (12.57%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விஜய் வசந்த்தும், அதிமுக சார்பில் பசிலியா நாசரேத்தும், பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?

News June 3, 2024

குமரியில் ஜூன் 11 முதல் 14 வரை ஜமாபந்தி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் கல்குளம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு தாலுகாக்களின் கிராம கணக்குகளை சரிபார்க்கும் “வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல்” (ஜமாபந்தி) நிகழ்ச்சியானது வரும் ஜூன் 11 முதல் 14ம் தேதி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்தார்.

News June 3, 2024

அய்யா வைகுண்டர் கோவில் தேர்திருவிழா

image

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாள் திருவிழா இரவு கலிவேட்டை நடைபெற்றது.  11ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

image

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போலீசார் பாது காப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் நாளை மூடப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

மாநில அளவிலான கால்பந்து போட்டி

image

குமரி மாவட்டம் மறவை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 17-ஆவது ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி மறவன்குடியிருப்பு சர்ச் விளையாட்டு மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி
மாமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி பொருளாதார பிரிவு மாவட்ட தலைவரும் ஆகிய ஐயப்பன் நேரில் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News June 2, 2024

மட்டிப் பழத்துக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்

image

குமரி மாவட்டத்தில் விளையும் சிறப்பான வாழைகளில் ஒன்று மட்டி. பார்க்க ரஸ்தாளி பழம் போல் இருக்கும் மட்டி பழம் மணமும், இனிப்பு சுவையும் மருத்துவ குணமும் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டி பழத்திற்கு கடந்த ஆண்டு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற நிலையில், புவிசார் குறியீடு வழங்க உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் இன்று புவிசார் குறியீடு அமைப்பால் வழங்கப்பட்டது.

News June 2, 2024

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 4 பேர் படுகாயம்

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாநில சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று கன்னியாகுமரிக்கு வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வேன் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஜீரோ பாயின்ட் அருகே பேரி காட் மீது மோதி, அருகில் நின்ற கேரள அரசு பேருந்து மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News June 2, 2024

படகு சவாரி டிக்கெட் கவுன்டர் அகற்றம்

image

கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகளை விற்க கவுண்டர் ஒன்றை எந்த வித அனுமதியும் பெறாமல் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் நேற்று குத்தகைதாரர் அமைத்து டிக்கெட் விற்பனை செய்தார். தகவல் அறிந்து திற்பரப்பு பேருராட்சி ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News June 2, 2024

ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்தவர் உயிரிழப்பு 

image

அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் கேரளா மலப்புரத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மலப்புரத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் கீழே இறங்க முயன்றார். ரயில் நகர்ந்தால் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!