India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட குவாரிகளில், உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டு பிடிக்கப்பட்டால், குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிம வள லாரிகள் செல்வதை உடனே தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11 அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மா.செ அல்காலித் அறிவித்துள்ளார்.

குமரி, சித்திரங்கோட்டில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இன்று ஊழியர்கள் குவாரி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. மதியம் சுமார் ஒரு மணி அளவில் மின்னல் தாக்கி 3 ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் குலசேகரம், தக்கலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கொற்றிகோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அக்.1-2022க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூன் 29க்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04652 262060 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

TNPSC தொகுதி 1-க்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் வேலைவாய்ப்பு மையத்தில் ஜூன் 10ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்யலாம். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கட்டுபாட்டின் கீழ் செயல்படும்
57 பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரம் இன்றி
செயல்படுகின்றது.
எனவே RTE 2009- சட்டத்தின்படி
எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மேலும் 2024-25 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்
அறிவுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர் விஜயதரணி. தற்போது அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விஜயதரணி (87,473) பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 3,581 வாக்குகள் பெற்று அவர் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் விளாங்கோடு தொகுதியை காங்கிரஸ் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று(ஜூன் 5) இரவு லேசான நிலவு அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாத போதிலும் நில அதிர்வினை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர்.

வேளாண்மைதுறை சார்பில் விவசாயிக்கு உளுந்து சாகுபடி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சென்ட் அளவில் மட்டும் அறுவடை செய்யப்படும். முதல் பரிசாக ரூ.250000, 2 ஆம் பரிசாக ரூ.150000, 3 ஆம் பரிசாக ரூ.100000 வழங்கப்படும். இதில், குறைந்தப்பட்ச மகசூல் எக்டருக்கு 888 கிலோ. 15.03.2025-க்குள் அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அருகாமையிலுள்ள வேளாண்மை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.