Kanyakumari

News June 18, 2024

விடுமுறை தினத்தில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்

image

தொடர் விடுமுறையையொட்டி குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை அதிகமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக, 15-ம் தேதி 7 ஆயிரம் பேரும், 16ஆம் தேதி 7 ஆயிரத்து 300 பேரும், பக்ரீத் பண்டிகை நாளான நேற்று 6 ஆயிரத்து 300 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் மொத்தம் 20 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

குமரி: சி.பி.ஐ.எம் கண்டன ஆர்பாட்டம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர குழு சார்பில் இன்று சி.பி.ஐ.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்த தம்பதிகளுக்கு அடைக்கலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை  சூறையாடியதையும், நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News June 18, 2024

குமரி: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

குமரி: திடீர் சாரல் மழை.. பொதுமக்கள் உற்சாகம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9:30 முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்யத் துவங்கியது. வடகிழக்கு பருவமழை முடிந்து சில நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், இன்று மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 18, 2024

நாகர்கோவிலில் ரூ.55 கோடியில் பஸ் நிலையம்

image

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்கிறது. மாநகரின் மிகப்பெரிய அடையாளமாக உருவாகும் இந்த பஸ் நிலையம் 3 அடுக்கு தளம் கொண்டதாக அமைய உள்ளது. அதேபோல் வணிக வளாகமும் கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 17, 2024

வாகன காப்பகமாக மாறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்?

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு அந்நியர் பலர் பணிக்கு செல்வதால் தற்போது அங்கு வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாகன காப்பகமாக மாறுகிறதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News June 17, 2024

தேசியக்கொடி அவமதிப்பு செயலுக்கு முற்றுப்புள்ளி

image

நோயாளிகளுக்கான கட்டில் உருவாக்கியதற்காக ஜனாதிபதியிடம் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது பெற்றவர் நாகர்கோவிலை சேர்ந்த சரவணமுத்து. இந்தநிலையில், சுதந்திர தினம் அன்று ஒருநாள் பயன்படுத்தும் தேசியக்கொடிகள் மறுநாள் குப்பை மேடுகளில் கிடைக்கிறது. இதை ஒழிக்க புதிய தொழில்நுட்பத்தை உறுவாக்கியுள்ளதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

News June 17, 2024

ரயில் அபாய சங்கிலியை இழுத்த 2 பேர் போலீசில் சிக்கினர்

image

கொல்லம் – சென்னை இடையே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று (ஜூன் 16) சென்னை நோக்கி காவல்கிணறு அருகே மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென நின்றது. விசாரணையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் 2 வாலிபர்கள் சண்டையிட்டு அபாய சங்கிலியை இழுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 17, 2024

கிள்ளியூரில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

image

கிள்ளியூர் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் ஜூன் 19ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் ஜூன் 20 காலை 9 மணி வரை ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குறை மற்றும் கோரிக்கை கேட்கப்படுகிறது.

News June 17, 2024

அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது போலீஸ் வழக்கு

image

இனயம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டின்ராஜ் (55) மர்ம மரணத்தை புதுக்கடை போலீசார் தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்தனர். ஆனால் கொலை வழக்காக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இனயம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் அனுமதியின்றி ஜூன் 15ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தி 2 பேருந்தை சிறைபிடித்தனர். நேற்று இது தொடர்பாக 100 பேர் மீது புதுக்கடை
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!