India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ள சீர்மரபினர் இந்த வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். பழைய உறுப்பினர்கள் புதுப்பித்து கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

பிற மாநில பேருந்துகள் தமிழகத்துக்குள் முறையாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்டு வருவதாக புகார் வருவதை தொடர்ந்து, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது. அந்த அடிப்படையில் நேற்று கன்னியாகுமரி, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் சுற்றி வருவதை அதிகாரிகள் கண்காணித்தனர். இதையடுத்து அப்படி சுற்றி வந்த 5 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆந்திராவில் இருந்து 2,200 டன் ரேஷன் அரிசி மூடைகள், ரயில் மூலம் 45 வேகன்களில் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

குமரி மாவட்டம் நீதிபதி தேர்வு எழுதுவோருக்கு இலவச கருத்தரங்கம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள செலஸ்டின் லா அகாடமியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி வாழ்த்துரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நேற்று (ஜூன் 20) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பாலூர் ஆப்புகோடு பகுதிக்கு வருகை தந்தார். அங்கு தொடங்கியுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் “நம்ம ஆவின்” நிலையத்தினை ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்களிடம் பாலின் தரம், பால் பொருட்கள் இருப்பு, அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றை முறையாக பின்பற்ற அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாலூரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பூங்காவினை ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 20) ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மை பணியாளர்களிடத்தில் மட்கும் மற்றும் மட்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்குமாறும், பாதுகாப்பான முறையில் பணியாற்றிடவும் அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (ஜூன் 20) கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கருங்கல் வட்டார கல்வி அலுவலக வளாகத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்குள்ள திப்பிரமலை அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு பரிமாறினார். மேலும், குழந்தைகளிடத்தில் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

குமரி – திப்ருகர் செல்லும் விவேக் விரைவு ரயில் சேவை தினசரி சேவையாக நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது குமரியில் இருந்து திப்ருகருக்கு வெள்ளி, ஞாயிறு தவிர்த்து ஐந்து நாட்கள் கேரளா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திப்ருகரில் இருந்து குமரிக்கு ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும் போலீசார் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் 4 அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இன்று 2வது நாளாக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது.இந்த ஒத்திகையின் போது, போலீசாரே தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவது, மீனவர்களை சிறைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.