India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பசலியான் நசரேத் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக குமரி மாவட்டம் முழுவதும் அதிமுக மற்றும் தோழமை கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கொட்டாரம் ஜங்ஷன் பகுதியில் நேற்று இரவு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அதிமுக வினர் திரளாக கலந்து கொண்டனர்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைஇ பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3மணி நேரத்தில் (மாலை 7மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(37). இவருக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் அவரது மனைவி கண்டிந்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதித்த பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.ரல்வாய்மொழி, திருப்பதிசாரம் ஏடபிள்யூஎஸ், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ, கன்னடயன் பாலமோர்,முக்கடல் அணை பகுதிகளில் 2 செ.மீ, கொளச்சல், பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறு, புத்தன்அணை, கன்னியாகுமரி, அணைகெடங்கு,சூரலக்கோடு, மயிலாடி, தக்கலை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
குமரி, குழித்துறை ஜங்ஷன் அண்ணா சிலை அருகே இன்று காலை பைக்கில் நின்ற நபர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த அந்த நபர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் போட்டியிடுகின்ற கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இன்று காலை தக்கலை பகுதியில் “ரோடு ஷோ” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
குமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குமரி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று குமரிக்கு வருகை தந்தார். நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அலைகடலென கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.