Kanyakumari

News April 17, 2024

சாலை மையத்தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து 

image

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து வடசேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. வெட்டூர்ணிமடம் பகுதியில் அந் பேருந்து வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே இருந்த மையத்தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. 

News April 17, 2024

சிறப்பு ரயில் சேவை

image

வெளியூரில் உள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை 18 ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி தேதிகளில் மாலை 4.45 மணிக்கு அதிவிரைவில் ரயில் புறப்பட்டு காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது. அதே போல் மறுமார்க்கத்தில் 19, 22 ஆகிய தினங்களில் ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலையில் புறப்பட்டு காலை தாம்பரம் சென்றடையும். இத்தகவலை திருவனந்தபுரம் கோட்டை மேலாளர் கூறியுள்ளார்.

News April 17, 2024

குலசேகரம் பகுதியில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்பிக்கு கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் குலசேகரம், அண்டூர், மலவிளை பகுதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 16, 2024

குலசேகரம் பகுதியில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்பிக்கு கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் குலசேகரம், அண்டூர், மலவிளை பகுதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 16, 2024

குமரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 16, 2024

குமரி அறிவியல் பேரவை சார்பில் மதிப்பீட்டு முகாம்

image

வாழ்க்கை சவால்களும் தீர்வுகளும் ஆய்வு செய்யும் இளம் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம் அருமனை வி.டி.எம் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஹேமாகுமாரி தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் ரோசிலின்கிரேஸ்
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுக உரையாற்றினார்.  

News April 16, 2024

குமரி: இரவிலும் வாக்கு சேகரித்த அமைச்சர்!

image

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினர் குமரி மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுமக்களிடம் நேற்று இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 16, 2024

கன்னியாகுமரியில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

image

கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

குமரி அருகே வாலிபர் நீரில் மூழ்கி பலி

image

நாகர்கோவில் அருகே சேவியர் காலணியை சேர்ந்தவர் சுமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர்
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் விஷ்ணுபுரம் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 15, 2024

குமரி மழைப்பொழிவு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.14) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இரணியலில் 3 செ.மீட்டரும், குளச்சலில் 2 செ.மீட்டரும், குருந்தன்கோட்டில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!