India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35), கொத்தனார். இவரது வீட்டின் பின்பக்கம் மின் விளக்கு எரியாததால் சரிசெய்வதற்காக, ஜன்னல் மீது ஏறியுள்ளார். அப்போது ஜன்னல் சரிந்து ராதா கிருஷ்ணன் வயிற்றுப் பகுதியில் விழுந்தது. ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளிச் சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று காலை முதலே வரத் தொடங்கியுள்ளனர். சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மணிமண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்றும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கருங்கல் கொல்லன்விளை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவருக்கும் ஐயன்விளையை ஜான் கோசி(34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று சதீஷ்குமாரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ஜான்கோசி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் சதீஷ்குமாரின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அருமனையை சேர்ந்தவர் விஜித் (20). பிளம்பர். நேற்று மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திருவரம்பு சிஎஸ்ஐ சர்ச் அருகில் விஜித்தின் கட்டுபாட்டை இழந்து சர்ச் அருகில் இருந்த வீட்டு காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்ததாவது: நாகர்கோவில் பால்பண்ணை முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி நாளை முதல் 30 நாட்கள் நடப்பதால், பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து பால்பண்ணை, டெரிக், கலெக்டர் ஆபீஸ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையாக பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக செல்ல வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம் கணேசப்புரத்தை சேர்ந்த நாகர்கோவில் காசி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த ராஜேஷ்சிங் என்பவர் துபாயில் ஓட்டுனராக வேலை பார்த்து தலை மறைவாக இருந்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய ராஜேஷ்சிங்கை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டம் சேனவிளை பகுதியில் இரு அரசு பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி வழியாக இயங்கி வந்த 3 அரசு பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்தி, தனியார் வாகனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டி பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அறப்புரை ஊர் அருள்மிகு ஸ்ரீ வாதையன் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று(ஏப்.26) அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் ஐயப்பன் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.