India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேற்று அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, “நாம் ஜிஎஸ்டி செலுத்துகிறோம். மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அதை செய்யாமல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய துரோகம் செய்கிறது. இந்தி பேசாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. தமிழ்நாடு மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.

தமிழகத்தின் இன்று(ஜூலை 27) 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம், கோவை ரைபிள் அசோசியேசன் சார்பில், மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
திற்பரப்பை சேர்ந்த திருவட்டாறு எக்ஸெல் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் அண்ட்ரிக் டிலானோ
25 மீட்டர், 10 மீட்டர் பிஸ்டல் பிரிவுகளில்
ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களை பெற்றுள்ளார். சாதனை படைத்தவரை பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை, குமரி எம்பி விஜய் வசந்த் டெல்லி அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என கேட்டு கொண்டார். வெளிநாடு வாழ் குமரி மக்கள், சுற்றுலா பயணிகள், கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவை என்பதை அவர் எடுத்து கூறினார்.

குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் ஜூலை 29 முதல் ஆகஸ்டு 3 வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு போன்:04652-291744 Email: disakanyakumari@gmail.com

பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து தமிழக முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்று நடத்துவதற்காக திமுக நட்சத்திர பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் இன்று குமரிக்கு வருகை தந்தார். அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அரசை கண்டித்து திமுக. சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரனை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கபிள்ளை உடனிருந்தார்.

பவ்டா தொண்டு நிறுவனம் தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கிளை உள்ளது. பவ்டா 40-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலக்கியத் திருவிழாவாக ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது என நிறுவனர் கூறினார். விவரங்களை அறிய E-Mail :bwdakavithai@bwda.org , வெப் : bwda.org.in

குமரியில் ரம்புட்டான் பழ சீசன் துவங்கியது. பூ மற்றும் காய் பிடிக்கும் காலமான மே மாதம் முதல் தொடர் மழை பெய்ததால் மரங்களில் இருந்து பூ, காய்கள் அதிக அளவில் உதிர்ந்தது. இதனால் மரங்களில் ரம்புட்டான் காய்கள், பழங்கள் குறைவாகவே காணப்படுகிறது.
ரம்புட்டான் பழங்களின் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக உள்ளது. குலசேகரம் பகுதியில் இந்த பழங்கள் கிலோ ரூ.340 க்கு விற்கப்படுகிறது.

களியக்காக்களை அருகே கோழி விளை பகுதியில் 4823 என்ற எண்ணுடைய பாருடன் கூடிய டாஸ்மாக் இயங்கி வருகிறது. இதன் அருகில் ஆலயம், கோவில், பள்ளிவாசல், மருத்துவமனை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நெருக்கடியான இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரி நாளை மறுநாள் (ஜூலை-29) முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.