Kanyakumari

News August 4, 2024

நட்புன்னா என்னன்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கன்னியாகுமரியில் உள்ள 5,73,949 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

News August 3, 2024

குமரியில் ரப்பர் விலை கிடு கிடு உயர்வு

image

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரப்பர் ஷீட் உற்பத்தி கடுமையாக சரிந்த நிலையால் ரப்பர் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரப்பரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று கோட்டயம் சந்தையில் ஆர்.எஸ்.எஸ். 4 ஆம் தர ரப்பர் ஷீட்டின் விலை கிலோவுக்கு ரூ.226 என நிர்ணயிக்கப்பட்டதால், குலசேகரம் பகுதியில் அதன்படி விற்பனையாகிறது.

News August 3, 2024

குமரியில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் அவர்கள் பணியாற்றிய மாவட்டங்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் விவரம்: குலசேகரம்: மீனா, கன்னியாகுமரி: சரவணன், திருவட்டார்: முருகன், புதுக்கடை: ஜானகி, களியக்காவிளை: பாலமுருகன், இரணியல்: செந்தில்வேல் குமார்.

News August 3, 2024

குமரியில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ற 3 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் டேவிட் நேற்று முன்தினம்(ஆக.01) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், டேவிட்டை வெட்டிக் கொலை செய்த ஜோன் ராஜ்(28), பின்னி டேப்(36) மற்றும் பரமசிவன்(37) ஆகிய 3 பேரை போலீசார் இன்று(ஆக.03) கைது செய்துள்ளனர்.

News August 3, 2024

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக www.tntourismawards.com என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகிற 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கன்னியாகுமரி சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். போன்: 04682246276, 9176995866.

News August 3, 2024

தமிழக அரசுக்கு குமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி

image

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெருந்தலைவர் காமராஜர் வழி நடந்து, காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கி, தமிழை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு தகைசால் விருது வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. குமரி மாவட்டத்துக்கும், குமரி மக்களுக்கும் இது பெருமை சேர்ப்பதாகும். தமிழக அரசுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

News August 2, 2024

ஆட்டோ டிரைவரை கொன்ற 5 பேர் கைது

image

புதுக்கடை கருமரம் ஆட்டோ டிரைவர் மரியடேவிட்டுக்கும் ஐரேனிபுரம் நிர்மலுக்கும் கடந்த 31-ம் தேதி தகராறு ஏற்பட்டு, நிர்மலின் தாயாரை மரிய டேவிட் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிர்மல், பென்னிட்டாய், காட்வின் ஜாண் ராஜ், பரமசிவன், எழில் குமார் ஆகியோருடன் சேர்ந்து நேற்று மரிய டேவிட்டை வெட்டி கொன்றார். இதையடுத்து, 5 பேரையும் புதுக்கடை போலீசார் இன்று கைது செய்தனர்.

News August 2, 2024

நான் முதல்வன் திட்டம் – குமரி மாவட்ட விவகாரம்

image

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில், குமரி மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 2787 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாத நிலவரப்படி https://www.naanmudhalvan.tn.gov.in/jobportal/Home/index இணையதளத்தில் 13,303 பேர் தங்களது விருப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக பாலிடெக்னிக் மாணவர்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

News August 2, 2024

கண்காணிப்பு வட்டத்திற்குள் வந்த குமரி

image

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை கிராம மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மழைநாட்ளில் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!