India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டத்துக்கு எதிராக குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் இன்று(ஆக.9)நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் மாநில சட்ட பிரிவு துணை தலைவர் கணபதி சுப்பிரமணியம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் பண்பாட்டு சுற்றுலாவிற்காக கன்னியாகுமரி அயலக தமிழ் மாணவர்களை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்க ராஜ், மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரி கடலில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை காண படகில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நெல்லை திசையன்விளையை சேர்ந்த பல் மருத்துவர் நீலவேணி. இவர் குமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்துபோனது குறித்து விசாரிக்க, அவரது தந்தை காவல்துறையினருக்கு மனு கொடுத்தார். இந்நிலையில், நீலவேணி கடந்த மாதம் 27ஆம் தேதி வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை 12-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, கட்டுகளாக குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் நெற்பயிர் கட்டுகளை கோவில் மேல்சாந்தி தலையில் சுமந்து அம்மனுன் முன் படைத்து பூஜை செய்வர். அடுத்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பெண் காவலர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் பதிவு செய்த வழக்கில் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் நாகர்கோவில் சிறைக்கு கொண்டுவரப்பட்டார். இன்று இரவு நாகர்கோவில் சிறையில் இருக்கும் அவர் நாளை சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார்.

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா, தலைமையில், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர், நாளை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அயலகத் தமிழர் மாணவர்களை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து வளாகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கப்பல் மூலம் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிக்க செல்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை கோவையில் நாளை (ஆக.9) தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆட்சியர் அழகுமீனா தலைமையில், மேயர் மகேஷ் முன்னிலையில், நாளை காலை 11 மணிக்கு கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குமரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள் புரத்தில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெருமாள்புரம் அகதிகள் முகாமுக்கு சென்று ஆய்வு செய்தார். முகாமில் ரூ.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளையும் அவர் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையானது கடலின் நீர்மட்டம் தாழ்வு காரணமாக தற்காலிகமாக படகு சேவை இன்று (ஆக.09) காலை முதல் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.