Kanyakumari

News August 10, 2024

குமரியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்

image

குமரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்காக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (ஆக.10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை தீர்க்க பொதுமக்கள் மனு அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

குமரியில் ஆக.,15ல் கிராம சபை – ஆட்சியர் அறிவிப்பு

image

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஆக.10) தெரிவித்துள்ளார். ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

News August 10, 2024

நாகர்கோவிலில் நாய்கள் கண்காட்சி

image

குமரி கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவில் அனைத்து வகை நாய் கண்காட்சி & சேம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. சேம்பியன்ஷிப் போட்டிகளுக்கு செர்பியாவை சேர்ந்த நெனாட் டேவிடோவிக், நடாசா டேவிடோவிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட கென்னல் கிளப் செய்து வருகிறது. SHARE IT.

News August 10, 2024

ஆக.11ல் நாகர்கோவில் நாய் கண்காட்சி

image

கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவில் அனைத்து வகை நாய் கண்காட்சி & சேம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறுகிறது. சேம்பியன்ஷிப் போட்டிகளுக்கு செர்பியாவை சேர்ந்த நெனாட் டேவிடோவிக், நடாசா டேவிடோவிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட கென்னல் கிளப் செய்து வருகின்றது.

News August 10, 2024

தக்கலையில் சிறுமியை தாக்கிய தாய், மகள் மீது வழக்கு

image

தக்கலை அருகே பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ்(35). இவரது வீட்டின் அருகில் வசிக்கும் நிஷா என்பவர் LKG படிக்கும் சதீஷின் மகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். நேற்று மாலை(ஆக.,9) வீட்டிற்கு வந்த சிறுமி அழுது கொண்டு இருக்கவே, விசாரித்ததில் நிஷா & அவரது தாய் சுதா சிறுமியை தாக்கியது தெரிந்தது. தக்கலை போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 10, 2024

விதிமீறலாக வாகனம் ஓட்டியதாக 25 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், ராமன்புதூர் பள்ளி அருகே போக்குவரத்து போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 25 நபர்கள் மீது மோட்டார் வாகனச்சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News August 10, 2024

வழக்கறிஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

image

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் – 9) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் குற்ற வழக்குகளை விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

News August 9, 2024

குமரி ஆட்சியரகத்தில் கலந்தாய்வு கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஆகியோர் தலைமை வகித்தனர். உடன், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

News August 9, 2024

பிரதமருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்

image

நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேசியக் கொடியை மதிக்கக் கூடிய நாகரிகத்தை இந்த நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் பெற்றிருக்கின்றோம்; நான் பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்; சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஆர் எஸ் எஸ் அனைத்து அலுவலகங்களிலும் ஏற்றுவதற்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும்; அவர் இதை செய்வாரா? என நான் கேட்கின்றேன்” என்றார்

News August 9, 2024

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

76-சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, திருவள்ளுவர் சிலைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்புப்படையினர் அதிநவீன படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும், லாட்ஜூகள், ரயில், பஸ் நிலையங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!