India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக ஏராளமான தெரு நாய்கள் சாலையோரங்களில் கூட்டமாக வலம் வருகின்றன. இவற்றில் சில சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. இந்நிலையில் நேற்று(மே 1) ஒரே நாளில் 3 இடங்களில் 10க்கும் பேரை நாய்கள் கடித்து குதறியது. இதில் ராஜஸ்தானில் இருந்து சுற்றுலா வந்த 3 பேரும் அடக்கம். எனவே இதனை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வழங்கப்படுவதை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிபடுத்த வேண்டும். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மேரி கிறிசிபா. இவரது கணவர் பாஸ்கர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி உனக்கு விவகாரத்து வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி கணவரின் உறவினர்களான ஷீபா, பால்சன் ஆகிய இருவரும் ரூ.13 லட்சம் பெற்றதாக அப்பெண் நாகர்கோவிலில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த் மே தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் இந்த மே தினத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்; தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது; தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் போற்ற பட வேண்டியவர்கள்” என்றார்.
கோடை வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. கன்னியாகுமரியின் மழைபொழிவு அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தக்கலையில் 5 செ.மீட்டரும், கோழிப்போர்விளை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், குழித்துறை, முள்ளங்கான விளை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், சித்தார், சிவலோகம், திருப்பரப்பு, பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் வாக்குபதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோணம் அரசு கல்லூரியினை சுற்றி பாதுகாப்பினை கருதி 2 கி.மீ சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரீதர் (இ.ஆ.ப ) தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் தெள்ளாந்தியை சேர்ந்தவர் ஜெர்ஷின்(19), நர்சிங் மாணவர். நேற்று ஜெர்ஷினும், அவரது நண்பர் சேம் பிரிட்டோவும் கோட்டாரில் நின்றபோது வட்டவிளையை சேர்ந்த ஜினோ(20) ஜெர்ஷினுடன் தகராறு செய்து பைக் சாவியால் அவரை குத்தியுள்ளார். கோட்டார் போலீஸ் விசாரணையில், சேம் பிரிட்டோவும், ஜினோவும் ஒரே பெண்ணை ஒருதலையாக காதலித்ததும், இந்த தகராறில் கைகலப்பானதும் தெரிய வந்துள்ளது.
குமரி மாவட்ட நீதித்துறையில் 65 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தக்கலை அருகே பத்மநாதபுரம் என்னும் ஊரில் கிபி.1601 இல் வர்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டது. திருவாங்கூர் மன்னர்களின் உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
குமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35), கொத்தனார். இவரது வீட்டின் பின்பக்கம் மின் விளக்கு எரியாததால் சரிசெய்வதற்காக, ஜன்னல் மீது ஏறியுள்ளார். அப்போது ஜன்னல் சரிந்து ராதா கிருஷ்ணன் வயிற்றுப் பகுதியில் விழுந்தது. ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளிச் சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.