Kanyakumari

News May 3, 2024

குமரி: ரயிலில் அடிபட்டு மிளா உயிரிழப்பு

image

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி – பணகுடி ரயில்வே தண்டவாளத்தில் நேற்று(மே 2) காலை மிளா ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மிளாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

News May 2, 2024

காவல் வாகனங்கள் ஏலம் விட முடிவு

image

கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் முதிர்ந்த நிலையில் கழிவு
செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வரும் 16.05.2024 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில், மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும். விருப்பம்
உள்ளவர்கள் 16.05.2024 அன்று ரூ.1000- செலுத்தி ஏலத்தில்எ பங்கேற்கலாம் என மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News May 2, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தெரிவிக்க செல்போன் எண் வெளியீடு

image

குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க புகார், தகவலை பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை தமிழ்நாடு குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை வெளியிட்டது. துறையை 18005995950 என்ற எண்ணிலும், திருநெல்வேலி சரக டிஎஸ்பியை 8300070283, குமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை 9498120504, சப்- இன்ஸ்பெக்டரை 9498122246, 9498133960 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

News May 2, 2024

கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 2, 2024

குமரியில் கவுன்சிலர் பைக் எரிப்பு

image

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.30) தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் எரிந்த நிலையில் இருந்தது. முன்விரோதத்தில் பைக்கை எரித்ததாக ஹரிஹரன் என்பவரை கன்னியாகுமரி போலீசார் தேடி வருகின்றனர்.

News May 2, 2024

5 நாளில் 32,616 பேர் வருகை!

image

கோடை விடுமுறை சீசனை ஒட்டி சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாளில் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 32 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News May 2, 2024

தக்கலை பகுதியில் நாளை மின்தடை!

image

குமரி மாவட்டம் தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில், வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை பீடர் உயர்அழுத்த மின் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நாளை(மே 3) நடைபெறுகிறது. இதனால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநயினார் குறிச்சி, மூங்கில்விளை, கல்படி, காருபாறை, ஞாறோடு, மணவிளை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தகவல்.

News May 2, 2024

பூதப்பாண்டி பகுதியில் மின்தடை ரத்து!

image

பூதப்பாண்டி மற்றும் அழகியபாண்டியபுரம் மின்விநியோகப் பிரிவிற்குட்பட்ட இறச்சகுளம், கடுக்கரை, தாழக்குடி ஆகிய உயர் அழுத்த மின்பாதைகளில் இன்று மற்றும் 4, 6ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூதப்பாண்டி பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் கேரளா எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கான அனைத்து துறை ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 1, 2024

திருவட்டார் பகுதியில் மின் தடை அறிவிப்பு

image

திருவட்டார் மின் விநியோகத்துக்கு உட்பட்ட அருமனை பீடர் கீழ் வரும் தேமானூர், தோட்டவாரம், மூவாற்றுமுகம் சுற்றுவட்டார கிராமங்களில், நாளை(மே 2) மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் அவசர பராமரிப்பு  பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  குலசேகரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!