Kanyakumari

News May 4, 2024

குமரி: மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பலி

image

குமரி, பளுகல் பகுதியில் உள்ள வீட்டில் AC பழுதாகி உள்ளது. இதனை சரிசெய்ய இன்று இளைஞர் ஒருவர் தனது நண்பனுடன் சென்ற நிலையில், பழுதை சரி செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில், இந்த இளைஞர் காட்டாத்துறையை சேர்ந்த அஸ்வின் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பளுகல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

குமரியில் அழகிய மாத்தூர் தொட்டிப்பாலம்!

image

குமரி, மாத்தூரில் உள்ள தொட்டிப்பாலமானது 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஆசியாவின் மிக உயரமான மற்றும் மிக நீளமானதாகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 6 அங்குல அகலமும் கொண்டது. இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. அருகில் சிறுவர் பூங்காவும் உள்ளது.

News May 4, 2024

குமரியில் ரெட் அலெர்ட்!

image

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

குமரியில் நாளை 7 இடங்களில் நீட் தேர்வு

image

குமரி மாவட்டத்தில் ஆற்றூர் என்.வி.கே.எஸ் பள்ளி, ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் வின்ஸ் கல்லூரி, ஒழுங்கினசேரி ராஜாஸ் பள்ளி, ஆரல்வாய்மொழி லயோலோ கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. கல்லூரி, பால்குளம் ரோகிணி கல்லூரி ஆகிய 7 கல்வி நிலையங்களில் நாளை(மே 5) நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 5,196 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது.

News May 4, 2024

குமரி: எம்-சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

image

குமரி அருகே கொல்லங்கோடு சூழால் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று(மே 3) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாரஸ் லாரி ஒன்று எம்-சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், ஜல்லிகள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெற்று எம்-சாண்ட் கடத்தியது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் லாரியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

பகவதி அம்மன் கோயிலில் கால் கோள் விழா

image

குமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவிற்கான கால்கோள் நடும் விழா இன்று காலை பகவதி அம்மன் கோயிலில் நடைப்பெற்றது. இதில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

குமரி: மினி பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

image

குமரி மாவட்டம் கோட்டார் போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் மினி பஸ் ஒன்று வந்தது. இதன் டிரைவர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கினார். இதனை கண்ட போலீசார், மினி பஸ்சை நிறுத்தி டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News May 3, 2024

கால்நடைகள் குறித்து அறிவுரை கூறிய அமைச்சர்

image

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டிய கடமை அவற்றை வளர்ப்பவர்களுக்கு உள்ளது; கால்நடைகளுக்கு நாள்தோறும் 4 முதல் 5 முறை குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அப்போதுதான் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

News May 3, 2024

தந்தையை மகள் கொன்ற வழக்கில் ஏட்டுகளுக்கு தொடர்பு?

image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்து கைதான மகள் ஆர்த்தியுடன் 2 ஏட்டுகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்த்தியின் பிரச்னைகளை 2 போலீசாரும் தீர்த்து வைத்ததாகவும், இந்த கொலை வழக்கை நீர்த்துப் போக அவர்கள் முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட காவல்துறையினர் மேற்படி ஏட்டுகளிடம் விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

பரசுராம் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும்!

image

மங்களூரு சென்ட்ரல் டூ நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ்(16649), மங்களூருவில் இருந்து வழக்கமாக காலை 5.05 மணிக்கு புறப்படும் நிலையில் மே 3,5 தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக 5.35 மணிக்கு புறப்படும். அதே போன்று, மங்களூருவில் இருந்து மே 7,11,22,25,29 மற்றும் ஜூன் 5,8 தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக காலை 6.35 மணிக்கு புறப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!