India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் கடற்கரையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கம்பிளார் பகுதியை சேர்ந்த தந்தையும், மகளும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தந்தை மீட்கப்பட்ட நிலையில் மகள் ஆதிஷா(7) மாயமானார். அவரை தேடும் பணி இரவு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அந்த சிறுமியை சடலமாக மீட்டனர். இந்த சோக செய்தி கம்பிளார் பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 95.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.91% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 98.22% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்
குமரி மாவட்டத்தில் நேற்று(மே 5) ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தேங்காப்பட்டணம் கடலில் கம்பிளார் பகுதியை சேர்ந்த தந்தையும், குழந்தையும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. மீட்பு பணியை ராஜேஷ் குமார் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீட்பு பணியை தீவிரப்படுத்த கேட்டு கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.84% மாணவர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர்- 5196 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 4980 பேர் நீட் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 216 தேர்வு எழுதவில்லை. மேலும் நீட் தேர்வில் கேள்விகள் சுலபமாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் எடுப்போம் எனவும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இவருவரும் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், மக்கள் தந்தை பிரேமதாஸ்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கடலில் மாயமான அவரது 7 வயது மகள் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
குமரி, கருங்கல் அருகே அணஞ்சிகோடு பகுதியில் அமைந்துள்ள இம்மானுவேல் லுத்தரன் சபையின் புதிய ஆலய அர்ப்பண விழா மற்றும் 90-வது சபை ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். திமுக இளைஞரணி நிர்வாகி ஜூட் தேவ் மற்றும் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோயில் மாநகராட்சி இடலாக்குடி பகுதியில் தனியார் நிறுவனத்தால் தெரு விளக்கு பணிகள் நடைபெறுகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பல இடங்களில் மரக்கட்டைகளை தெரு விளக்குடன் கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் மின் விளக்கு எரியாததால், வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவம் நடக்கிறது. பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
குமரி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5196 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்த வகையில் நீட் தேர்வு மையங்களுக்கு மாணவ மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீட் தேர்வு மையங்கள் ஒவ்வொரு பாயிண்டிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
குமாரபுரம், பூவங்காபறம்பு , ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சித்திரை பொங்காலை திருவிழா மற்றும் கொடை விழா நேற்று தொடங்கியது. சிவதாணுபிள்ளை மணிகண்டன், நாககுமார், சுரேஷ் முன்னிலையில் குமரி மாவட்ட கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்த திருவிழா வரும் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
குமரி, பளுகல் பகுதியில் உள்ள வீட்டில் AC பழுதாகி உள்ளது. இதனை சரிசெய்ய இன்று இளைஞர் ஒருவர் தனது நண்பனுடன் சென்ற நிலையில், பழுதை சரி செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில், இந்த இளைஞர் காட்டாத்துறையை சேர்ந்த அஸ்வின் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பளுகல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.