India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

“மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் உள்ள பேருந்து நிலையங்களை அலுவலர்கள் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களில் உள்ள பாசிகளை அகற்றி பெயிண்டிங் செய்ய வேண்டும். முக்கியமான அலுவலக பணிகளை தவிர்த்து காலை முதல் மதியம் வரை மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் கரும் பாட்டூரில் நேற்று (ஆக. 15) நடந்த கிராம சபா கூட்டத்தில் ஆட்சியர் அழகு மீனா பேசினார். அப்போது, “கல்லூரி மாணவ, மாணவியர்கள் பட்டப் படிப்பு முடித்த பின்பு, தங்களுக்கு அரசு, தனியார் துறைகளில் தகுதியான வேலை கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல் தங்களது தனித்திறமைகளை கண்டறிந்து தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டும்” என பேசினார்.

திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை வருகிறார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தக்கலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார் என திமுகவினர் தெரிவித்து

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று சுதந்திரத் தினத்தையொட்டி இந்த வருடத்திற்கான தகைசால் தமிழர் விருதினை தமிழுக்கு தொண்டாற்றிய இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு வழங்கினார். இதுபற்றி குமரி MP விஜய் வசந்த் பதிவிட்டதாவது; விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மீண்டும் எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து சென்னை கிளம்பாக்கம் செல்ல வழக்கமாக ரூ.700 முதல் ரூ.1200 வரை ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை ஆம்னி பஸ்களில் ரூ.2000 முதல் ரூ.4000 வரை ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு இதை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் 840 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 400 பேருந்துகள் மாவட்டத்திற்குள்ளும், அவற்றில் 320 பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அந்தவகையில், இதுவரை மொத்தம் 35.76 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இன்று ( ஆக.15) காலை 9.05 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியில் பல்துறை அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர் .

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முன் வைக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.