India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றாறு ஒன்று அணைப்பகுதியில் 35.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், சுருளோட்டில் 23.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, மழையினால் பேச்சுப்பாறை அணைக்கு 723 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 501 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

சுதந்திரதினத்தன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், வடசேரி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அன்று ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 41 கடைகள், நிறுவனங்கள் ,10 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நேற்று (ஆக.16) நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜகுமார் கூறினார்.

சிவன் கோவில்களில் பிரதோஷ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நாளில் நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று சனி பிரதோஷம் என்பதாால் அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சங்கமும் அறநிலையத்துறையும் செய்து வருகிறது.

நாங்குநேரி பகுதியில் ரயில்வே இருப்பு பாதை பணிக்காக வைத்திருந்த 2 டன் தளவாட இரும்பு பொருட்களை திருடிய நாங்குநேரி பகுதியை பகுதியைச் மாரிதாஸ், அஜித், திருநெல்வேலியை சேர்ந்த இருதயராஜ், மற்றும் இரும்பு பொருட்களை வாங்கிய செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை நாகர்கோவில் ரயில்வே போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்ளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில்8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ் எழுத படிக்க, சைக்கிள் ஓட்ட தெரிந்த 18 வயதிற்குமேற்பட்டவர்கள் ஆக.30 க்குள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் மீன்வளம், மீனவர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வெறுவதற்கான சிறப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.17, 19, 20 நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இது பொய்யான தகவல் என்றும், பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம். இது போன்ற பொய் தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதிலும் போலீசார் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்தனர். உரிய ஆவணங்கள், ஹெல்மெட் அணியாமலும் சென்றதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க வாழை இனங்களில் ஒன்று செவ்வாழை. கடந்த வாரம் வரை ஒரு கிலோ செவ்வாழைப்பழம் ரூ. 80 விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.90 என விலை உயர்ந்துள்ளது. இன்றுடன் ஆடி மாதம் முடிவடைந்து கல்யாண சீசன் மாதமான ஆவணி நாளை துவங்குவதால் செவ்வாழையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.

குமரி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஹைதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மூலமாக PGDAEM ஒரு வருட டிப்ளமோ படிப்புக்கு http://WWW.manage.gov.in/moocs/pgdaem- moocs.asp என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை. கட்டணம் ரூ.8,000 ஆகும். மேலும், இதற்கு 30.09.2024 -க்குள் விண்ணப்பிக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.