Kanyakumari

News August 18, 2024

குமரி எழுத்தாளர் பால் ராசய்யா காலமானார்

image

“குமுதம்” வார இதழ் ஒரு பக்க கதை மூலமாக நாடெங்கும் அறியப்பட்ட நாடகாசிரியர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் ஐரேனிபுரம் பால் ராசய்யா நேற்று (ஆக.17)
காலமானார். அவரது நல்லடக்கம் கேரள மாநிலம் உதியன்குளம் கரையில் இன்று (ஆக. 18) நடைபெற்றது. இதில் ஊர் மக்கள், சபையினர், பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

News August 18, 2024

பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சுருளோட்டில் 25.4 மி.மீ மழையும், சிற்றாறு மற்றும் பேச்சிப் பாறை அணைப்பகுதியில் தலா 23 மி.மீ மழையும், பாலமோரில் 20 மி.மீ மழையும் பெய்துள்ளது. மழையின் காரணமாக பேச்சுப் பாறை அணைக்கு 800 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 243 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News August 18, 2024

நாகர்கோவிலில் நாளை சிறுகுறு தொழில் கடன் முகாம்

image

நாகர்கோவிலில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கிளை அலுவலகத்தில் சிறு குறு தொழில் கடன் முகாம் நாளை (ஆக. 19) முதல் செப்.6 வரை நடக்கிறது. மேலும் இதையொட்டி வரும் ஆக.23.ம் தேதி காலை நாகர்கோவில் ரோட்டரி சென்டரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. கடன் முகாம் மற்றும் கருத்தரங்கில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 18, 2024

குமரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிருங்கள்*

News August 18, 2024

நாகர்கோவில் வழியாக சிறப்பு ரெயில்

image

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 21, 28 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரத்தில் புதன்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கத்தில் ஆக., 22, 29, செப்.5 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும்.

News August 18, 2024

வடக்குத்தாமரைகுளத்தில் ஆட்சியர் ஆய்வு

image

வடக்கு தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சன்ன இரக நெல்-கோ 55 நெல் ஆதார விதைகள் உற்பத்திப்பண்ணையை ஆட்சியர் அழகு மீனா நேற்று பார்வையிட்டார். விதைப்பண்ணையில் உருவாக்கப்படும் நெல்களின் தரத்தினை எவ்வாறு கண்டறிவது என கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து பறக்கை பகுதியில் வேளாண் உழவர் விற்பனை குழுக்கள் மற்றும் விவசாயிகள் நெல் அறுபடை பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

News August 17, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 17, 2024

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இன்று 44.24 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் 68.85 அடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணையில் 13.71 அடி தண்ணீரும்,  சிற்றாறு 2 அணையில் 13.81 அடி தண்ணீரும் உள்ளது. பொய்கை அணையில் 15.2 அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் 49.62 அடி தண்ணீரும், முக்கடல் அணையில் 21 .60 அடி தண்ணீரும் உள்ளது.

News August 17, 2024

குமரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

image

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

News August 17, 2024

குமரி மாவட்டத்தில் 3,124 பேர் வழக்கு பதிவு

image

குமரி மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை விதிமீறி வாகனம் ஓட்டியதாக 3124 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டிய 18 வயதுக்குட்பட்ட 237 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். தற்போது விபத்துகள் அதிகமாக நடப்பதால் போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!