Kanyakumari

News August 20, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் தரப்பட்டு அவர்களுக்கு தீர்வு காணப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

ஸ்ரீ நாராயண குருவாக நடித்து விருது வாங்கிய தமிழ் நடிகர்

image

நடிகர் தலைவாசல் விஜய் 2010ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையை பதிவு செய்த “யுக புருஷன்” என்ற மலையாள சினிமாவில் நாராயண குருவாக நடித்தார். அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அந்த படத்தை பார்த்து விஜய்யை புகழ்ந்தார். அந்த ஆண்டுக்கான கேரள சினிமாவின் சிறந்த நடிகர் விருதும் தலைவாசல் விஜய்க்கு கிடைத்தது. இந்த படம் வெளியான போது கேரளாவில் இவரை கொண்டாடினர்.

News August 20, 2024

குமரி தபால்துறை வேலைக்கான Merit List

image

கன்னியாகுமரி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. கன்னியாகுமரி தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>.

News August 20, 2024

ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாள் இன்று

image

1856 ஆம் ஆண்டு ஆக.,20ஆம் தேதி திருவனந்தபுரம் செம்பழுந்தியில் பிறந்த ஸ்ரீ நாராயண குருவின் இயற்பெயர் நாராயணன். சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சீர்திருத்தவாதி. தனது 23வது வயதில் குமரி மருத்துவாழ்மலையில் 8 ஆண்டு துறவியாக வாழ்ந்தார். 20.09.1928 அன்று சிவகிரியில் சமாதி அடைந்தார்.

News August 20, 2024

குமரி அமைச்சருக்கு நன்ற தெரிவித்த மக்கள்

image

ஸ்ரீநாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று(ஆக.,20) குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு முதல் முறையாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை சமுதாயத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

News August 19, 2024

குமரியில் 3 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் ஸ்ரீ நாராயண குருவை பின்பற்றும் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருவதால் ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டாறு ஆகிய 3 தாலுகாக்களுக்கு மட்டும் அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அந்த விடுமுறை செப்டம்பர் 14ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும்.

News August 19, 2024

குமரி மாவட்டத்தில் 3 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கல்குளம் வட்டாட்சியராக இருந்த முருகன் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே நிலமெடுப்பு கூடுதல் அலகு 3 வட்டாட்சியர் சஜித் கல்குளம் வட்டாட்சியராகவும், மற்றொரு ரயில்வே நிலம் எடுப்பு வட்டாட்சியர் சுபா சஜித்துக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 19, 2024

சுசீந்திரம் அருகே ரவுடி மீது துப்பாக்கி சூடு

image

குமரி கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகள் உள்ளன. இவர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், தேரூர் பகுதியில் இவர் செல்வதாக கிடைத்த தகவலின் பெயரில், இன்று(ஆக.,19) சப் இன்ஸ்பெக்டர் நிதின் செல்வராஜ் அவரைப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது செல்வம் அரிவாளால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

News August 19, 2024

குமரி அருகே ஆபாச வீடியோ எடுத்தவர் போக்சோவில் கைது

image

குமரி மாவட்டம் தென் தாமரைகுளம் இலந்தையடியை சேர்ந்தவர் அபினேஷ்(23). இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் போக்கோ சட்டத்தில் இவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று(ஆக.,18) கைது செய்தனர். மேலும் வீடியோவை பதிவிறக்கம் செய்து பலருக்கு அனுப்பிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

News August 19, 2024

குமரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: கலெக்டர்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வரை வீட்டுக்கு வீடு வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி திருத்தியமைத்தல் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!