Kanyakumari

News March 29, 2025

குமரி நகை கடை கொள்ளையர்கள் பிடிபட்டனர்

image

அஞ்சுகிராமம் வடக்கு பஜாரில் உள்ள நகைக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், அஜித், அசோக் ,சுரேஷ் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

News March 29, 2025

குமரி வழக்கறிஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

தக்கலை அருகே 13.3.2025 அன்று 2 பள்ளி மாணவிகள் மாயமாகினர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் குமார் மாணவிகளை பைக்கில் ஏற்றி சென்று, ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குமரி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று அவர் சிறையிலடைக்கப்பட்டார். *வக்கீலின் இச்செயல் குறித்த உங்கள் கருத்து?

News March 29, 2025

வடசேரி பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ், வியாபாரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி சென்றார். அங்கிருந்து இன்று காலை பேருந்தில் நாகர்கோவில் வந்தார். வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரியவந்தது.  இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

News March 29, 2025

குமரி நல்வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist, Health Visitor என 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 12 ஆம் வகுப்பு , any Degree, B.Pharm, D.Pharm, Diploma, DMLT தபடித்தவர்கள் ஏப்.5 வரை விண்ணப்பிக்காலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.13,000 முதல் ரூ.19,800 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்தி விண்ணப்பிக்காலம். SHARE IT

News March 29, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தின் இன்றைய நிகழ்வுகள்

image

1.குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 2. காலை 10 மணிக்கு பழங்குடியின மக்களின் நான்காவது மாநில மாநாடு பேச்சிப்பாறையில் நடைபெறுகிறது. 3. மாலை 4 மணிக்கு மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு சிபிஐ எம் எல் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது.

News March 29, 2025

தாமரை இலை பறித்தால் கடும் நடவடிக்கை

image

சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்கம் ஆகிய குளங்கள் பறவைகள் பாதுகாப்பு குளங்களாக உள்ளன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இந்த குளங்களில் அளவுக்கு அதிகமாக தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாமரைகளை பறவைகளுக்கு இடையூறாக பறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று  மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

டூவிலர் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

குறும்பனையைச் சேர்ந்தவர் ஜான் சுஜின் பிரதீப் (33). இவர் இருசக்கர வாகனத்தில் கருங்கல் – தேங்காய்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது கீழ்குளம் பகுதியில் இவரது டூவிலர் மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 29, 2025

குமரியில் எட்டு காவல் அதிகாரிகள் இந்த மாதம் ஓய்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்களான சுசீந்திரம் ஷோபனா ராஜ், களியக்காவிளை கதிரசன், மார்த்தாண்டம் மாகின் மற்றும் சார்லஸ், கட்டுப்பாட்டு அறை சங்கர குமார், கடையால மூடு தாஸ், தக்கலை முருகன், தபால் பிரிவு கண்காணிப்பாளர் உதயகுமாரி ஆகியோர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சால்வை போர்த்தி கௌரவித்தார்.

News March 28, 2025

குமரியில் 207 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22, 208 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 22,001 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 28, 2025

குமரி பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

image

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை இத்திட்டத்தில் 13,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். *நல்ல வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க* ஷேர்

error: Content is protected !!