India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திற்பரப்பு பகுஹ்டியில் 5 செ.மீட்டரும், களியல் பகுதியில் 3 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சிற்றாறு – 1, இரணியல், பாலமோர், அடையாமடை, முக்கடல் அணை ஆகிய பகுதிகள் 1 செ.மீட்டர் அளவு மழைப்பொழிவு பதிவானது.
தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்குகின்ற நான் முதல்வன்
திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு
பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் பொறியியல்
கல்லூரிகளில் 22,798 நபர்களும், கலை, அறிவியல் கல்லூரிகளில்
27,795 பேரும் தொழில்நுட்ப கல்லூரிகளில் 6,725 பேர் என மொத்தம் 57,318 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
தமிழ் நாட்டில் தனியார் நிலங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து மதங்களை சேர்ந்த வழிபாட்டு தலங்களை செப்பனிடுவதற்கும் சீரமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற தேவை இல்லை என மே-7 தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு விஜய் வசந்த் எம்.பி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி, தென்தாமரைகுளம் பகுதியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை புதுக்கிராமம் அணியும், மூன்றாவது இடத்தை நாகர்கோவில் இந்துக்கல்லூரி அணியும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் லால்மோகன்(87). குமரி மாவட்ட சுற்றுச்சூழலை காக்க ஏராளமான பொது நல வழக்குகளை தொடுத்து மக்களிடையே பிரபலமான லால் மோகன் நேற்று முன்தினம் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று (15.ம் தேதி) நாகர்கோவிலில் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் சுற்றுச் சூழல்களை காக்க தீவிரமாக களப்பணியாற்றியவர். 150 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்த் என பல வகையான மாம்பழங்கள் சந்தைக்கு வந்தாலும் குமரி மக்களுக்கு மிகவும் பிடித்தது இம்மாவட்டத்தில் விளையும் செங்கவருக்கை மாம்பழம் ஆகும். நார்ச்சத்தும், இனிப்புச் சுவையும் மிகுந்த இப்பழம் கடந்த மாதம் ரூ.200 முதல் ரூ.250 வரை விலையில் விற்பனையானது. தற்போது செங்கவருக்கை மாம்பழம் சந்தையில் வரத்து சற்று அதிகரித்ததால் விலை குறைந்து ரூ.180க்கு விற்பனையாகிறது.
இன்று அதிகாலை சுமார் 4:30 மணிக்கு தக்கலை, மணலி பகுதியில் மாவட்ட
பறக்கும் படையினர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் ரோந்து சென்ற போது ஒரு டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது. அதிகாரிகள் டெம்போவை 3 கி.மீ தூரம் விரட்டியதும் டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
டெம்போவில் சுமார் 3 டன் அரிசி கேரளாவுக்கு கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து உடையார்விளை கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று (மே. 14) கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடயே 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.