Kanyakumari

News May 16, 2024

குமரி போலீசார் வெளியிட்ட மீம்ஸ் வைரல்

image

ஆவேசம் மலையாள படத்தில் ரங்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது கன்னியாகுமரி காவல்துறை ஆவேசம் பட பகத்பாசில் படத்துடன் பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் மாட்டிக் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் இணைய தளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

News May 16, 2024

குமரிக்கு ரெட் அலர்ட்!

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

image

கன்னியாகுமரி, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள புது குடியிருப்பு சுப்பையார்குளத்தில்   கேரள மாநிலம் பாறசாலை சேர்ந்த நபர் நேற்று இரவு தன்னுடைய உடமைகளை படித்துறையில் வைத்து விட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கியவர் நீரில் மூழ்கி பலியானர். இதனையடுத்து தீயணைப்புதுறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 16, 2024

அரசு பேருந்து ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்

image

நெல்லை, வள்ளியூரில் கன மழையின் போது ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய குமரி மாவட்டம் ராணி தோட்டம் பணிமனை அரசு பேருந்து. இந்த சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஒட்டுனர் சசிகுமார் என்பரை ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

News May 16, 2024

குமரி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 9.94, 10.04 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44. 91 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 47 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.5 அடி நீரும் இருப்பு உள்ளது.

News May 16, 2024

குமரியில் குளு குளு சீசன்

image

கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குளு, குளு சீசன் நிலவுகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

News May 15, 2024

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

image

குமரி மாவட்டத்தில் 15.05.2024 முதல் 17.05.2024 ஆகிய நாட்களுக்கு மிதமான மழையும்.18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை இருக்கும் அதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகள், ஆற்று ஓரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 15, 2024

குமரி: 19 ஆம் தேதி வரை மழை பெய்யும்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படாதவாறு அணை கட்டு மற்றும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

குமரி : நாளை கனமழைக்கு வாய்ப்பு.

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

குமரி: இரு நாட்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் (மே.15 & 16) கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!