Kanyakumari

News April 19, 2024

ஆர்வமுடன் வாக்களித்த குமரி கலெக்டர்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் இன்று காலை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருசடி புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 19, 2024

அமைச்சர் மனோ தங்கராஜ் வாக்களிப்பு

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த வகையில் கருங்கல் அருகே மூசாரி அரசு மேல்நிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை வாக்களித்தார்.

News April 19, 2024

குடும்பத்துடன் ஜனநாயக கடமை ஆற்றிய குமரி கலெக்டர்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் நாகர்கோவில் குருசடி பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

News April 19, 2024

குமரி: விஜய் வசந்த் எம்பி வாக்களித்தார்

image

குமரி மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக  தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காலை முதலே வாக்களிக்க ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங். வேட்பாளரான விஜய் வசந்த் எம் பி. இன்று காலை அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

News April 19, 2024

குமரி: தனியார் விடுதியில் மதுபாட்டில்கள் பறிமுதல்

image

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தனியார் விடுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விடுதியை சோதனை செய்து அங்கு இருந்த 550 மது பாட்டில்களை(750ml) பறிமுதல் செய்த கன்னியாகுமரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 18, 2024

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

கன்னியாகுமரி: மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 18, 2024

நாகர்கோவில்: நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்பேற்பு

image

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெஃபினோ நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று(ஏப்.17) பொறுப்பேற்று கொண்டார். இவர் தக்கலை வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். காங்கிரசார் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News April 17, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 17, 2024

சாலை மையத்தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து 

image

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து வடசேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. வெட்டூர்ணிமடம் பகுதியில் அந் பேருந்து வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே இருந்த மையத்தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. 

error: Content is protected !!