Kanyakumari

News August 30, 2024

காளிகேசம், கீரிப்பாறை செல்ல அனுமதி

image

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனத்துறையினர், கீரிப்பாறை, காளிகேசம் உட்பட உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தனர். தற்போது மழை குறைந்ததால் ஆற்றில் வெள்ளம் வரத்து குறைந்தது. இதனால் வனத்துறை நேற்று காளிகேசம், கீரிப்பாறை சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதித்தனர். 

News August 29, 2024

குமரி வந்த துரை வைகோ மதிமுகவினர் வரவேற்பு

image

மதிமுக தலைமை நிலைய செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மதிமுகவினர் சிறப்பாக வரவேற்றனர். தொடர்ந்து, நாளை ஆரல்வாய் மொழியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

News August 29, 2024

நவராத்திரி விழாவுக்கான ஆலோசனை கூட்டம்

image

சுசீந்திரம் அம்மன், வேளிமலை குமாரசுவாமி, தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்கிரகங்கள் நவராத்திரி விழாவுக்காக குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்குஊர்வலமாக செல்லப்படும். இவ்விழாவிற்கான ஆலோசனை கூட்டம் கேரள திருவனந்தபுரத்தில் இன்று (ஆக.29)நடந்தது. கேரள தேவசம் அமைச்சர் வ வாசவன், மாவட்ட கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 

News August 29, 2024

குமரியில் கல்வி கடன் முகாம் நடைபெற்றது

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமானது மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. முகாமில் ரூ.2.5 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வழங்கினார். இதனால், பல மாணவர்கள் பயனடைந்தனர்.

News August 29, 2024

குமரியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை பிற்பகல் 4.30 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News August 29, 2024

தலைமை ஆசிரியர்களுடன் தனித்துவ மாணவர் நிகழ்ச்சி

image

நாகர்கோவில் பொன்.ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் இன்று மாலை 3.30 மணிக்கு “தலைமை ஆசிரியர்களுடன் தனித்துவ மாணவர் நிகழ்ச்சி” நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா, நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

News August 29, 2024

குமரி மீனவர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கண்ட கடல்பகுதியிலும் மத்திய அரபிக் கடலை ஒட்டிய பகுதியிலும், கேரள கடலோரப் பகுதியிலும் அதிவேகத்தில் காற்று வீச கூடும். இதனால், இன்று முதல் 31ஆம் தேதி வரை குமரி மாவட்டம் மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 29, 2024

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் நீடிப்பு

image

நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து செப். 1, 8, 15, 22, 29, அக்.6, 13, 20, 27, நவ.3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து செப்.2, 9, 16, 23, 30, அக்.7,14, 21, 28, நவ.4,11,18, 25 ஆகிய தேதிகளில் புறப்படும்.

News August 29, 2024

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

image

நாகர்கோவிலில் உள்ள கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் ராமச்சந்திரசோனி நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 15 மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்தனர். வகுப்பறையில் செல்போனில் வீடியோ, போட்டோ எடுப்பார் எனவும் மாணவிகள் குற்றசாட்டியுள்ளனர் .

News August 29, 2024

நாகை.திருவள்ளுவனுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

image

தமிழ் புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் கூலிப்படைகளின் கூட்டு சதி தொடர்பான தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என குமரி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் தலைமையில் அந்த கட்சியினர் நாகர்கோவிலில் எஸ்பி-யிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!