India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பார்ட் டைம் எம்பி என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார். ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்.பி.யாக பணியாற்றினேன் அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்து எடுங்கள் என நாகர்கோவில் நடந்த இந்திய கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசினார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சிற்றாறில் (கன்னியாகுமரி) – 4 செ.மீ., சிவலோகம், திற்பரப்பில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறில் தலா ஒரு செ.மீ. மழை பதிவானது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் இருந்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று(ஏப்.4) தோவாளை அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தோவாளையை சேர்ந்த அஜய்காந்த் என்பவரின் காரை சோதனை செய்ததில் ரூ.14 லட்சம் இருந்தது தெரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமைகள்தோறும் இயக்கப்பட்டு வந்த, சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15க்கு புறப்படும் ரயில் மதியம் 2.10க்கு நாகர்கோவில் சென்றடையும்; நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.10க்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் தலைமை தேர்தல் அலுவலகத்தில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் நேற்று(ஏப்.3) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத்தை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அதிமுக நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராம் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒ.செயலாளர் எஸ்.ஜெஸீம், மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.